மன்னார் நிருபர்
30-09-2021
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் மற்றும் மன்னார் பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுள வீர சிங்க தலைமையில் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட 100 பாடசாலை சிறுவர்களுக்கான இன்று (30) கற்றல் உபகரணங்களை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் பாடசாலைகள் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளமையை கருத்தில் கொண்டு வறுமை கோட்டிற்கு உட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 100 மாணவர்களுக்கு அடிப்படை கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் கற்றல் செயற்பாடுகள் மேற்கொள்வதில் சிரமம் உள்ள மற்றும் கற்றல் உபகரணங்கள் கொள்வனவு செய்வதில் கஷ்டம் உள்ள மாணவர்களுக்கு மேலதிக கற்றல் உபகரணங்களை வழங்குவதற்கான ஏற்பாடும் மன்னார் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது டன் தேவையுடைய மாணவர்கள் பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொள்வதன் ஊடாக கற்றல் உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலையம் தெரிவித்துள்ளது.