கனடாவில் இயங்கிவரும் ‘ரொறன்ரோ மனித நேயக் குரல்’ அமைப்பின் (TORONTO VOICE OF HUMANITY ) ஏற்பாட்டில் கனடா வாழ் வர்த்தகப் பிரமுகர்களான திருவாளர்கள் பாஸ்கரன் சின்னத்துரை மற்றும் என்கேஎஸ் – கேதா நடராஜா ஆகியோரின் நிதிப் பங்களிப்பில் திருகோணமலை செல்வநாயகபுரம் பகுதியில் வாழும் வாழ்வாதாக உதவிகள் தேவைப்பட்ட 25 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பெற்றன.
கடந்த சில வருடங்களாக ‘ரொறன்ரோ மனித நேயக் குரல்’ அமைப்பின் ஏற்பாட்டில் கனடா வாழ் ஈகைப் பண்பு கொண்ட பல அன்பர்களது ஆதரவோடு இவ்வாறான உதவிப் பணிகள் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது
செய்தியும் படங்களும் திருமதி தவமலர் கோணேஸ்வரநாதன்- திருகோணமலை