(30-09-2021)
தற்போது இலங்கையில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை (01) அதிகாலை 4 மணிக்கு நீக்கப்பட்டதன் பின்னர் கடைபிடிக்க வேண்டி புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வௌியிடப்பட்டுள்ளது.
அதன்படி, அதேபோல், புதிய சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய இரவு 10 மணி முதல் அதிகாலை 04 மணி வரை அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.
பல்பொருள் அங்காடிகள், மருந்தகங்கள், விற்பனை நிலையங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், நாளை (01) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை பதிவுத் திருமண வைபவங்களில் 10 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதியில் இருந்து ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரை திருமண வைபங்களில் அதிகபட்சமாக 50 விருந்தினருக்கு மாத்திரமே கலந்து கொள்ள முடியும்.
மேலும், நாளை (01) முதல் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை கொவிட் அல்லாத மரண சடங்களில் 10 பேருக்கு மாத்திரமே கலந்து கொள்ள முடியும்.
ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி முதல் 15 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் 24 மணித்தியாலங்களில் இறுதிச் சடங்கு இடம்பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பேருந்துகளில் ஆசன எண்ணிக்கைக்கு மட்டுமே பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும்.
அத்தியாவசிய நடவடிக்கைகள் தவிர பிற நடவடிக்கைகளுக்கு மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் தொடரும்.
குளிரூட்டப்பட்ட வாகனங்களை பொதுப் போக்குவரத்தில் பயன்படுத்தக் கூடாது மற்றும் ஜன்னல்களைத் திறந்து வைக்க வேண்டும்.
எப்போதும் முகக்கவசம் அணியுங்கள்.
வேலைக்கு அழைக்கப்படும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்க வேண்டும் மற்றும் முடிந்த வரை வீட்டிலிருந்து வேலை செய்ய ஊக்குவிக்கப்பட வேண்டும்.
பணியமர்த்தப்பட வேண்டிய ஊழியர்களின் எண்ணிக்கை நிறுவனத்தின் தலைவரால் தீர்மானிக்கப்பட வேண்டும்.
மறு அறிவித்தல் வரை பொதுக் கூட்டத்திற்கு அனுமதி இல்லை.
ஒக்டோபர் முதலாம் திகதி முதல் ஒக்டோபர் 15 வரையான சுகாதார வழிகாட்டுதல்கள்
*திருவிழாக்கள், பார்ட்டிகள், கூட்டங்களுக்கு அனுமதி இல்லை.
*உணவகங்கள் திறக்க அனுமதி இல்லை.
*திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும்.
*கண்காட்சிகள் மற்றும் மாநாடுகளுக்கு அனுமதி இல்லை.
*விவசாயத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
*முடிதிருத்தும் மற்றும் அழகு நிலையங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
*200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் திறக்க அனுமதி.
*பகல் நேர பராமரிப்பு மையங்களை திறக்க அனுமதி.
*பாலர் பாடசாலைகளை 50% கொள்ளளவில் பராமரித்துச் செல்ல முடியும்.
*பல்கலைக்கழகங்கள் உட்பட உயர்கல்வி நிறுவனங்களை சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய ஆரம்பிக்கலாம்.
*நடைபாதை பாதைகள், கடற்கரைகள் திறந்திருக்கும்.
*திருமணங்கள், திருமணப் பதிவுகளில் 10 பேர் பங்கேற்கலாம்.
*இறுதிச் சடங்கிற்கு 10 பேர் மட்டுமே பங்கேற்க முடியும்.
*விகாரைகள், தேவாலயங்கள் மற்றும் கோவில்கள் போன்ற வழிபாட்டு இடங்களில் கூட்டு நடவடிக்கைகள் அல்லது கூட்டங்களுக்கு அனுமதி இல்லை.
*தொழிற்சாலைகள் சுகாதார வழிகாட்டுதல்களின் படி செயல்படலாம்.
*வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி பரீட்சைகளை நடாத்தலாம்.