(2-10-2021)
வவுனியா குடியிருப்பு பகுதியில் வீட்டை உடைத்து பெருமளவு பணம் நகை கொள்ளையிடப்பட்டுள்ளது.
நேற்று (1) மாலை வீட்டில் யாருமில்லாததை அறிந்த இனம் தெரியாத நபர்கள் வீட்டின் பிரதான வாயிலை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.
இதன்போது அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 04 நான்கு பவுண் நகை மற்றும் 3 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணம் என்பனவற்றை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்..
சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.