அண்மையில் இந்திய மாநிலங்கள் அவையின் உறுப்பினரும் இலங்கை இந்திய அரசியலில் குழப்பங்களை ஏற்படுத்தும் கருத்துக்களை பகிர்ந்து வருபவருமான சுப்பிரமணியன் சுவாமி, ‘இந்தியாவின் உண்மையான நண்பன் இந்தியாதான் என்று கூறியுள்ளது தொடர்பாக பல அரசியல் விமர்சகர்கள் தங்கள் கருத்துக்களை இணையவழி ஊடாக பகிர்ந்த வண்ணம் உள்ளார்கள் என கூறுப்படுகின்றது.
அவ்வாறானவர்களில் இந்தியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவுர்” இலங்கையின் பிரதமர் மகிந்தாவோடு சுப்பிரமணியன் சுவாமிக்கு உள்ள நெருங்கிய நட்பினால் யாருக்கு நன்மை?” என்ற கேள்வியை தனது டுவீற்றர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இவ்வாறான நிலையில் இந்திய மாநிலங்கள் அவையின் உறுப்பினரான சுப்பிரமணியன் சுவாமி, இந்திய வெளியுறவு துறை சார்ந்த விடயங்களிலும் தலையிடுவதை பல அமைச்சர்கள் விரும்பவில்லை என்றும் அறியப்படுகின்றது.
இது இவ்வாறிருக்க. கடந்த புதன்கிழமை இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவைச் சந்தித்திருந்த சுப்பிரமணியன் சுவாமி விரைவில் இலங்கை செல்லவுள்ளதாக தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
அதனைத்தொடர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவரை தமது குடும்பத்தினரின் நவராத்திரி விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் சுப்பிரமணிய சுவாமியிடத்தில் இவ்விடயங்கள் பற்றி தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு வினவியபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
இலங்கை விஜயம் இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது குடுத்தினரால் எதிர்வரும் வாரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நவராத்திரி விழாவில் கலந்து கொள்ளுமாறு அன்பாக அழைத்துள்ளார். எனது நெருங்கிய நண்பராக இருக்கும் அவரின் அழைப்பினை ஏற்று அந்நிகழ்வில் பங்கேற்கவுள்ளேன். அது மிகவும் உணர்வு பூர்வமானது.
அதனைத்தொடர்ந்து இலங்கையின் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் பங்கேற்கும் விசேட நிகழ்வொன்றில் ‘தேசிய பாதுகாப்பு’ சம்பந்தமான விசேட உரையொன்றையும் ஆற்றவுள்ளேன்.
இதற்கு அடுத்தபடியாக இந்திய இலங்கை மீனவர்கள் விவகாரம் தீராத பிரச்சினையாக நீடித்துக்கொண்டிருக்கின்றது. இந்த விடயம் சம்பந்தமாக முக்கியமாக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
இரு அயல்நாடுகளுக்கு இடையில் இவ்விதமான நிலைமை தொடர்வது பொருத்தமற்றதாகும். ஆகவே இலங்கையின் அமைச்சரவையில் அந்த விடயத்திற்குப் பொறுப்பாகவுள்ள அமைச்சரைச் (கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா) சந்தித்து பிரத்தியேகமான பேச்சுக்களில் ரூடவ்டுபடவுள்ளேன்.
குறிப்பாக அந்தப்பேச்சுவார்த்தை இருநாட்டு மீனவர்களின் பிரச்சினைகளுக்கும் சுமூகமான தீர்வொன்றை நிரந்தரமாகப் பெறுவதை மையப்படுத்தியதாகவே இருக்கப்போகின்றது.
ராஜபக்ஷக்களால் பெருமிதம் இலங்கையின் கடந்த ஆட்சியாளர்களும் அங்கு பணியாற்றிய எமது நாட்டு இராஜதந்திர சேவையில் இருந்த நிருவாகத்தினரும் ராஜபக்ஷக்கள் தொடர்பாக தவறான பிம்பத்தினை கட்டியெழுப்பியிருந்தனர்.
தற்போது, அந்த பிம்பம் அகன்றுள்ளது. இலங்கையின் உண்மையான நண்பன் இந்தியா என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனை ராஜபக்ஷ சகோதரர்கள் தமது ஆட்சியில் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.
அத்துடன், சீனாவுடன் இலங்கை நெருக்கம் கொண்டிருப்பதாக கூறப்படுகின்ற உணர்வுபூர்வமான விடயங்கள் அனைத்தும் தற்போது மீளவும் சீரமைக்கப்பட்டு வருகின்றது. கடந்த ஆட்சியாளர்கள் சீனாவுடன் சாய்ந்திருந்த நிலைமைகள் தற்போது காணப்படவில்லை.
அத்துடன், எமது நாட்டின் இராஜதந்திர உத்தியோகத்தர்களும் மாற்றப்பட்டுள்ளனர். இதனால் தவறான தோற்றப்பாடுகள் ஏற்படும் நிலைமைகள் தற்போது காணப்படவில்லை. இந்தியாவுக்கும்ரூபவ் இலங்கைக்கும் காணப்படும் நீண்டகாலமான உறவுகள் மீளவும் வலுப்பட ஆரம்பித்துள்ளன.
அண்மையில் நான் இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தனிகர் மொரகொடவைச் சந்தித்திருந்தேன். அவர் இந்திய, இலங்கை உறவுகளுக்கு புத்துயிர் அழிப்பதற்கான பாதைவரைபடமொன்றை உருவாக்கியிருக்கின்றார். அது பாராட்டத்தக்க விடயமாகும்.
இவ்விதமான இந்திய, இலங்கை உறவுகள் மீளவும் புத்துயிர் அளிக்கப்பட்டு மென்மேலும் வலுப்படவுள்ளன என்பதில் எவ்விதமான சந்தேகமில்லை அதற்கு என்னாலான செயற்பாடுகளையும் முன்னெடுப்பேன் என்றார்.
அது பாராட்டத்தக்க விடயம் என்றார்