(03-10-2021)
இலங்கையில் ஒரு கிலோ கிராம் பால் மாவின் விலை 200 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய ஒரு கிலோ பால் மாவின் சந்தை விலை 1,145 ரூபாய் வரை அதிகரிக்கும் என பால்மா இறக்குதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவை அனுமதிக்காக புதிய விலைகள் அடங்கிய ஆவணம் முன்வைக்கப்படவுள்ளதாக பால்மா இறக்குதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.
அதற்கமைய எதிர்வரும் வாரம் பால்மா தட்டுப்பாடிற்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
துறைமுகத்தில் உள்ள பால் மாவை முழுமையாக விடுவிப்பதற்கு இன்னமும் டொலர் பற்றாக்குறைகள் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.