50,000 நிதி அன்பளிப்பின் மூலம் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினால் கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்டு, தமது உறவுகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் தற்போதைய Covid 19 காரணமாக தமது வாழ்வாதாரத்தினை இழந்து பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அன்றாடம் உணவிற்கு அல்லல்படும் 20 குடும்பங்களுக்கு அவர்களின் அவசர உணவுத் தேவையினை பூர்த்தி செய்து கொள்வதற்கான உலர் உணவு பொருட்களை தந்துதவுமாறு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இன்றைய தினம் தலா ரூபா 2,500 பெறுமதியில் 20 குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.