கனடிய மூத்த குடிகள் சார்ந்த அமைப்புக்கள் அறிவிப்பு
எமது மக்கள் சார்ந்த ஓரு விடயத்தின் தவறிழைத்த கனடியப் பிரதமரின் மன்னிப்பு வார்த்தைகள் எமது மனநிலையை மாற்றிவிடக் கூடியன அல்ல. மாறாக நிறுவனமயப்படுத்தப் பட்ட மற்றும் பரவலான மாற்றத்திற்கு வழிவகுக்காத எவ்விதமான மன்னிப்புகளில் நாங்கள் ஆர்வத்தையும் காட்டவில்லை இவ்வாறு கனடிய மூத்த குடிகள் சார்ந்த அமைப்புக்கள் அறிவித்துள்ளன.
கனடிய மூத்த குடிகள் சார்ந்த இளையவர்கள் கல்வி கற்ற வதிவிடப் பாடசாலைகளிலிருந்து அவர்கள் விலக்கப்பட்டு பின்னர் அந்தக் குழந்தைகளில் உடல் எச்சங்கள் பல இடங்களில் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அவர்களின் மரணங்களுக்காக கனடா எங்கும் மூத்த குடிகள் சார்ந்த அமைப்புக்கள் கடும் எதிர்ப்புக்களை வெளிக்காட்டின. இந்த நிலையில் மூத்த குடிகள் சார்ந்த அந்த இளையோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு மரியாதையும் வணக்கமும் செலுத்தும் வகையில் ‘உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான கனடாவின் முதலாவது தேசிய தினம் அனுஸ்டிக்கப்பட்ட நாளன்று கனடியப் பிரதமர் தனது குடும்பத்தினரோடு பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள டோஃபினோவில் விடுமுறையை கழிக்கச் சென்றார்.
தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்ட மூத்த குடிகள் சார்ந்த அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு தான் அவ்வாறு விடுமுறையை கழிக்கச் சென்றது ஒரு தவறு என்று பிரதமர் ஒப்புக்கொண்டார்.
பிரதமர் மன்னிப்பு கேட்ட விவகாரம் தொடர்பாக அதிருப்தியும் மனக்கசப்பும் கொண்ட மூத்த குடிகள் சார்ந்த அமைப்புக்கள் கண்டன அறிக்கையை மீண்டும் வெளியிட்டுள்ளன.
இந்த 2021 மே மாத இறுதியில் கம்லூப்ஸ் என்னும் பிரதேசத்தில் உள்ள உள்ள முன்னாள் வதிவிடப் பாடசாலை மைதானத்தில் 200 க்கும் மேற்பட்ட அடையாளமற்ற மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் மூத்த குடிகள் சார்ந்த அமைப்புக்கள் கொதித்து எழுந்தன.
தொடர்ந்து. மூத்த குடிகள் சார்ந்த அந்த இளையோர்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதை நினைவு கூரும் முகமாக மரியாதையும் வணக்கமும் செலுத்தும் வகையில் ‘உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான கனடாவின் முதலாவது தேசிய தினம் ஆனஸ்டிக்கப்பட்ட திகதியன்று மேற்படி நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் ட்ரூடோவின் வருகைக்காக பிரதமர் அலுவலகத்திற்கு இரண்டு அழைப்புகளை அனுப்பியிருந்தன அந்த மூத்த குடிகள் சார்ந்த அமைப்புக்கள்.
அந்த அழைப்புகளுக்கான பதிலோ அன்றி மறுப்போ கிடைக்கவில்லை. ஆனால் மூத்த குடிகள் சார்ந்த அமைப்புக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் பிரமர் ட்ரூடோ அன்று தனது குடும்பத்துடன் விடுமுறையைத் கழிக்கச் சென்றார் இதன் காரணமாக ஒக்டோபர் 2ம் திகதி மூத்த குடிகள் சார்ந்த அமைப்புக்கள்pன் கண்டனத்தைத் தொடர்ந்;து பிரதமர் அவர்கள் முதலில் சில குறிப்பிட்ட அமைப்புக்களின் தலைவர்களிடத்தில் மன்னிப்புக் கோரினார். பின்னர் படிப்படியாக பகிரங்கமாக மன்னிப்பைக் கேட்கத் தொடங்கினார். இந்த விடயமான கனடா முழுவதிலும் பிரதமர் சார்ந்த விமர்சனங்களை ஏற்படுத்தத் தொடங்கியது.
தொடர்ந்து ஒட்டாவா மாநகரில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகம் தமது அழைப்புகளுக்கு பதிலளிக்கத் தவறியதால் மூத்த குடிகள் சார்ந்த அமைப்புக்கள் தமது ஏமாற்றத்தை மீண்டும் வலியுறுத்தின பிரதமரின் முடிவானது ஒரு விரும்பத்தகாத என்றும் வதிவிடப் பாடசாலைகளின் நிர்வாகிகள் இழைத்த கொடுமைகளிலிருந்து தப்பிப்பிழைத்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் ஆகியோருக்கான தனது உறுதிப்பாட்டை கனடியர்களுக்குக் காண்பிப்பதற்கான ஓர் சந்தர்ப்பத்தை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் தவறவிட்டு விட்டார் என்றே நாம் கருதுகின்றோம் என்று வாய்ப்பு என்று மூத்த குடிகள் சார்ந்த அமைப்புக்கள் விடுது;து அந்த அறிக்கையில் கூறப்பட்டது.