யாழ்ப்பாண பல்கலைக் கழக 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி, பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் நேற்று வியாழக்கிழமை நிகழ்நிலையில் இடம்பெற்றது.
யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழா நிகழ்வுகள் பல்கலைக் கழகத்தின் யூரியூப் மற்றும் முகப் புத்தக பக்கங்கங்களினூடாக நேரலையில் ஒளி பரப்பப்பட்டது. இரண்டு அமர்வுகளாக இடம்பெறவுள்ள இந் நிகழ்வில் சுமார் ஆயிரத்து 700 பேரின் பட்டங்கள் உறுதிப்படுத்தப்பட்டு பலருக்கு நேரடியாக வழங்கப்பெற்றன.
இவ்வருடத்திற்குரிய பட்டமளிப்பு விழாவை வெற்றிகரமாக நடத்த உதவிய பல்கலைக் கழகத்தின் பதிவாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் பீடங்களின் தலைவர்கள் ஆகியோருக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா நன்றி தெரிவித்தார்