ஓன்றாரியோவில் புதிய கட்டடங்களில் பறவைகளுக்கு உயிராபத்தை விளைவிக்காத வகையில் ஜன்னல்களை அமைக்க கட்டடச் சட்டங்களில் மாற்றங்களைக் காண விரும்பும் மாகாண அரசின் உறுப்பினர்
(ரோறன்ரோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம் )
கனடாவின்; ஓன்றாரியோ மாகாணத்தில் நிர்மாணிக்கப்படும் புதிய கட்டடங்களில் பறவைகளுக்கு உயிராபத்தை விளைவிக்காத வகையில் அவற்றோடு நட்பைப் பாராட்டும் வகையில் அதற்கேற்ப ஜன்னல்களை அமைக்க கட்டடச் சட்டங்களில் மாற்றங்களைக் காண விரும்பும் கிறிஸ் குளோவர் எனப்பெயர் கொண்ட ஒன்றாரியோ மாகாண அரசின் என்டிபி கட்சியின் தீவிரமான உறுப்பினர் ஒருவரை கடந்த 8ம் திகதி வெள்ளிக்கிழமையன்று சந்தித்தோம்.
இந்தச் சந்திப்பு ரொறன்ரோ மாநகரில் அமைந்துள்ள மாநகர சபை பிரதான செயலகத்தின் முன்பாக உள்ள தளத்தில் இடம்பெற்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
புதிய கட்டிடங்களின் ஜன்னல்களில் பறவை-நட்பு வடிவமைப்பை கட்டாயமாக்க எம்பிபி ஒன்றாரியோ மாகாண அரசையும் முதல்வர் டக்போர்ட் அவர்களையும் வலியுறுத்தும் வகையில் மேற்படி கிறிஸ் குளோவர் எனப்பெயர் கொண்ட ஒன்றாரியோ மாகாண அரசின் என்டிபி கட்சியின் உறுப்பினர் ஏற்பாடு செய்த பத்திரிகையாளர் சந்திப்பில் நாம் கலந்து கொண்டோம்.
ரோறன்ரோ -ஸ்பாடைனா-ஃபோர்ட் யோர்க் மாகாண சபை உறுப்பினரானீ கிறிஸ் குளோவர் அவர்கள் ஒன்ராறியோ கட்டிடக் குறியீட்டில் கனேடிய தர நிர்ணயக் கூட்டமைப்பின் பறவை நட்பு வடிவமைப்பு தரத்தை ஒருங்கிணைப்பதன் மூலம் உள்ர் பறவைகளையும் பிற தேசங்களிலிருந்து இங்கு வரும் பறவைகளையும் பாதுகாக்கும் ஒரு இயக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளளார்.
கடந்த வெள்ளிக்கிழமை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் குளோவர் தனது இயக்கத்தின் நோக்கம் மற்றும் தற்போதைய நடவடிக்கைகள் அவற்றின் முன்னேற்றம் ஆகியவை பற்றி உரையாற்றினார்; -அனைத்து புதிய குடியிருப்பு மற்றும் வணிக கட்டுமானங்களுக்கும் ஜன்னல்களுக்கு பறவை – நட்பு பொருட்களைப் பயன்படுத்துவது சட்டமாகும். அவருடன் பறவைகளை காக்கும் இயக்கத்தின் வழக்கறிஞர்கள் மைக்கேல் மெசுரே குடிய அமைப்பின் கனடாவின் நிர்வாக இயக்குநர்; ஜான் கார்லி கட்டிடக் கலைஞர் மற்றும் நண்பர்கள் அமைப்பின் இணைத் தலைவர்; ஆல்பர்ட் கோஹல் சுற்றுச்சூழல் வழக்கறிஞர் மற்றும் டொராண்டோ பறவையியல் கழகத்தின் தலைவர் எமிலி ரோண்டல் ஆகியோரும் அங்கு உரையாற்றினர்.
“நமது சுற்றுச்சூழல் அமைப்பைப் பராமரிப்பது காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளைத் தடுக்கும் மற்றும் கையாளும் ஒரு பகுதியாகும் மேலும் நாம் பல ஆண்டுகளாக கடைப்பிடித்துவரும் சுற்றுச்சூழல் அமைப்பு முறைகளில் பறவைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன” என்று குளோவர் அவர்கள் தெரிவித்தார். அவை தாவரங்களை மகரந்தச் சேர்க்கைக்கு உட்படுத்தி இனங்கள் பெருக உதவி செய்கின்றன மற்றும் வளமான விவசாய நிலம் ஆரோக்கியமான நிலங்கள் மற்றும் பசுமையான காடுகளை பராமரிக்க உதவுகின்றன.
ஒன்ராறியோவின் பல இடம்பெயர்ந்த பறவைகள் காலநிலை மாற்றத்தால் ஆபத்தான சரிவில் உள்ளன. இதே வேளை இங்கு கட்டப்படும் கட்டிடங்கள் பறவைகளின் முக்கிய கொலையாளியாகவும் விளங்குகின்றன. ஆபத்தில் உள்ள பறவை இனங்கள் உட்பட கனடாவில் ஒவ்வொரு ஆண்டும் கட்டிடங்களில் அமைக்கப்படும் ஜன்னல்கள் மோதி 25 மில்லியன் பறவைகள் இறக்கின்றன. ஏனவே அனைத்து புதிய கட்டுமானங்களும் பறவை-நட்பு சாளரப் பொருட்களைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்துவது மோதல்களைக் குறைப்பதற்கும் இந்த முக்கிய வனவிலங்குகளையும் நமது பல்லுயிரியலைப் பாதுகாப்பதற்கும் ஒரு எளிய செயல்திறன் மிக்க மற்றும் மலிவான வழியாகும் என்று குளோவர் கூறினார். அவர் தொடர்ந்து பேசுகையில் “முந்தைய மாகாண அரசு கட்டட அமைப்பு தொடர்பான சட்டங்களில் பறவைகளுக்குத் தேவையான ஜன்னல்களைப் பார்க்கும் வகையில் பறவை-நட்பு கட்டிட வடிவமைப்பிற்கான தேசிய தரத்தை உருவாக்க உதவியது. டொராண்டோ நகரம் உட்பட பல நகராட்சிகள் இந்த வழிகாட்டுதல்களை ஏற்றுக்கொண்டன ஆனால் ஒன்ராறியோ அரசாங்கம் அவற்றை கட்டாயப்படுத்த தவறிவிட்டது. இதை நாம் கண்டிக்கின்றோம்.
ஒன்ராறியோவின் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் மற்றும் கனடாவின் இனங்கள் ஆபத்துச் சட்டம் ஆகியவை ஜன்னல் மோதல்களால் பறவைகளுக்கு தீங்கு விளைவிப்பது அல்லது கொல்வது குற்றமாகும் ஆனால் அரசாங்கங்கள் இந்த சட்டங்களை அமல்படுத்தவில்லை.
“எங்கள் பறவை இனங்களைப் பாதுகாக்கவும் வரும் தசாப்தங்களுக்கு நமது சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் உறுதியான அர்த்தமுள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குளோவர் அவர்கள் மேலும் கூறினார்.
இந்த வேண்டுகோள் விடயமாக டக் போர்ட் அவர்களின் கொன்சர் வேர்ட்டிவ் கட்சியின் அரசாங்கம் இப்போது செயல்பட வேண்டும் மற்றும் ஒன்ராறியோவில் உள்ள அனைத்து புதிய கட்டிடங்களிலும் பறவை- நட்பு பொருட்களின் பயன்பாட்டை சட்டத்தில் குறிப்பிட வேண்டும். என்றார் இந்த வாரம் ஒன்ராறியோ மாகாண சபையில் உத்தியோகபூர்வ பதிவுக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர் குளோவர் இந்த பிரேரணையை சமர்ப்பித்தார்
என்பது இங்கு குறிப்பிடத்தக்கது