ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள்
“ராஜயோகம்”
Dr. K. RAM.Ph.D (USA)
தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377
மேஷம் :
எலக்ட்ரிக்கல் தொழில் லாபம் தரும். அலைபேசித் தகவல் ஆதாயம் தரும். நல்லோர்களின் சந்திப்பு கிட்டும். பெயர், புகழ் கௌரவம் செல்வாக்கு உயரும். பொதுப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். திருமணத் தடைகள் நீங்கும். புதுத் தொழிலை துவங்கும் வாய்ப்பு உள்ளது. வெளியூர் பயணம் நன்மை தரும். குடும்ப அன்யோன்யம் அதிகமாகும். வெளிநாட்டு நபரால் வெகுமதி கூடும். எண்ணிய காரியம் கை கூடும். புண்ணியஸ்தலம் செல்வீர்கள். பாத விநாயக வழிபாடு பாவம் போக்கும்.
அதிர்ஷ்ட எண்: 9, 4, 0, 7; அதிர்ஷ்ட நிறம்: குங்கும கலர், அதிர்ஷ்ட எழுத்துக்கள்: F, R
ரிஷபம் :
இனிப்பான செய்திகள் வரும். பழிச் சொல்லிலிருந்து விடுபடுவீர்கள். சொத்துப் பிரச்சனைகள் தீரும். பணியாட்களால் தொல்லை மாறும். கல்வியில் மந்த நிலை மாறும். ஜவுளித் தொழில் உயர்வு தரும். கலைத் தொழில் திருப்பம் வரும்.அலுவலகங்களில் பாராட்டு குவியும். மனைவியின் அன்பு அதிகரிக்கும். மற்றவரின் தொல்லைக் குறையும். பிரித்து குடும்பம் ஒன்று சேரும். முருக வழிபாடு முன்னேற்றம் தரும்.
அதிர்ஷ்ட எண்: 1, 9, 5, 2; அதிர்ஷ்ட நிறம்: சில்வர் கிரே, அதிர்ஷ்ட எழுத்துக்கள்: H, U
மிதுனம் :
மனம் மகிழும் நாள். உழைப்பிற்கான பலனை பெறுவீர்கள். திறமைகள் அதிகமாகும். இன்னல்கள் அகலும். கடன் தீரும். ஆக்கம் அதிகரிக்கும். பழைய பாக்கி வசூலாகும். வியாபாரத்தில் கவனம் தேவை. தன வரவில் தடங்கல் உண்டு. புதிய வாய்ப்புக்களை எதிர்பார்க்கலாம். பழைய நட்பு பலன் தரும். உறவினரால் பாதகம் உண்டு. உடல் நலனில் அக்கறை தேவை. உலோகத் தொழில் உயர்வு தரும். எள் தானம் ஏற்றம் தரும்.
அதிர்ஷ்ட எண்: 6, 0, 7, 4; அதிர்ஷ்ட நிறம்: யானை நிறம், அதிர்ஷ்ட எழுத்துக்கள்: Z, K
கடகம் :
திறமைகள் வெளிப்படும். பெரியோர்களின் ஆசி கிடைக்கும். உடல் நலத்தில் அக்கறை தேவை. ஏற்றுமதி தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டு. காதலால் மகிழ்ச்சி உண்டு. பொருள் சேர்க்கையுண்டு. வரவுகள் மிகுதியுண்டு. கால்நடையால் லாபம் உண்டு. ஆரோக்கியம் திருப்தி தரும். மறைமுக தொல்லை நீங்கும். ஆடை அணிகலன்கள் சேரும். பிள்ளைகளால் செலவு அதிகரிக்கும். மத வழிபாடு மாற்றம் தரும்.
அதிர்ஷ்ட எண். 8, 0, 5, 3; அதிர்ஷ்ட நிறம். நீலம், அதிர்ஷ்ட எழுத்துக்கள். N, U
சிம்மம் :
தொலைப்பேசி தகவல் மகிழ்ச்சி தரும். சொத்துக்களால் லாபம் கிடைக்கும். பிரபல்ய ஆசை ஏற்படும். பெருமிதத்துடன் காணப்படுவீர்கள். சிரமப்பட்ட காரியங்கள் நிறைவேறும். பயணத்தால் நல்ல பயன் கிடைக்கும். குடும்ப அன்யோன்யம் பெருகும். வீண் வம்பு ஓடி மறையும். பிள்ளைகளால் மன கசப்பு வந்து நீங்கும். வீடு, மனை ஆசைகள் பூர்த்தியாகும். மாருதி வழிபாடு மகிழ்ச்சியை தரும்.
அதிர்ஷ்ட எண்: 1, 8, 9, 2; அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, அதிர்ஷ்ட எழுத்துக்கள்: W, J
கன்னி :
உற்சாகமும் மகிழ்ச்சியும் அலைமோதும். கணவன், மனைவி அன்பு கூடும். நினைத்த காரியம் நிறைவேறும். பயணங்களால் பணம் கரையும். வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. பங்கு சந்தையில் லாபம் கிடைக்கும். காதல் கை கூடும். ஆபரண சேர்க்கை உண்டு. ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். வறுமைகள் விலகும். பெருமைகள் கூடும். பூமியால் லாபம் அடைவீர்கள். பணப் பற்றாக்குறை நீங்கும். புஷ்ப வழிபாடு புண்ணியம் சேர்க்கும்.
அதிர்ஷ்ட எண்: 2, 8, 5, 3; அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம், அதிர்ஷ்ட எழுத்துக்கள்: B, I
துலாம் :
வழிபாடு மாற்றம் தரும். காதல் பிரிவை ஏற்படுத்தும். வீண் குழப்பங்கள் வந்து போகும். உடல் நலம் மேம்படும். முயற்சிகளில் தாமதம் ஏற்படும். வியாபாரம் வெற்றி தரும். புதிய முயற்சிகள் கை கூடும். நண்பர்கள் உதவி கிட்டும். குடும்பத்தில் அமைதி உண்டு. அயல் நாட்டுப் பயணம் உண்டு. அரசியல்வாதிகளுக்கு அற்புதமான நாள். பித்ருக்கள் சாபம் நீங்கும். மங்களச் செய்தி வரும். கந்த வழிபாட்டால் மந்த நிலை மாறும்.
அதிர்ஷ்ட எண்: 1, 4, 9, 3; அதிர்ஷ்ட நிறம்: ஆழ்ந்த சிவப்பு, அதிர்ஷ்ட எழுத்துக்கள்: D, V
விருச்சிகம் :
நல்லோர்களின் சந்திப்பு கிட்டும். வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது. புதிய சிந்தனை உருவாகும். கண்ணாடிப் பொருட்கள் சேதமாகும். எதிர்ப்புகள் தவிடுப் பொடியாகும். அதிகாரியின் பாராட்டு கிடைக்கும். வி.ஐ.பியின் தொடர்பு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் தேவை. ஞாபக மறதி ஏற்படும். வெளி வட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். வேண்டாத நபர்கள் விலகுவர். காக வழிபாடு கர்மம் போக்கும்.
அதிர்ஷ்ட எண்: 4, 2, 7, 0; அதிர்ஷ்ட நிறம்: இளம் ஊதா, அதிர்ஷ்ட எழுத்துக்கள்: H, Q
தனுசு :
மனதில் மகிழ்ச்சி கூடும். நட்பு வட்டம் விரிவடையும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் குவியும். பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். உறவினர் வருகை உண்டு. பொறாமைகள் விலகும் நாள். வியாபாரம் வெற்றி தரும். முயற்சிகள் தாமதமாகும். நீண்ட நாளைய நோய் விலகும். தொழில் முயற்சி வெற்றி தரும். நண்பர்கள் உதவி கிட்டும். சுபக்காரியங்கள் நடந்தேறும். இல்லத்தில் அமைதி பெருகும். எள் தானம் ஏற்றம் தரும்.
அதிர்ஷ்ட எண்: 0, 9, 3, 6; அதிர்ஷ்ட நிறம்: செம்மஞ்சள், அதிர்ஷ்ட எழுத்துக்கள்: S, F
மகரம் :
பொறாமை விலகும். குதுகலம் சேரும். வருமானம் வரும். கல்வி ஆர்வம் கூடும். கட்டிடத் தொழில் லாபம் தரும். பதவி வாய்ப்பு வரும். பிள்ளைகளால் தொல்லை உண்டு. பூமி லாபம் உண்டு. தான தர்மங்கள் பலன் தரும். பணவரவு உயரும். பொருளாதாரம் உயரும். மங்கள செய்தி வரும். முயற்சிகள் பலன்தரும். ஆடம்பர எண்ணம் அதிகரிக்கும். அடுத்தவர் தலையீடு தவிர்க்கவும். நவதானிய வழிபாடு நலம் தரும்.
அதிர்ஷ்ட எண்: 2, 4, 6, 8; அதிர்ஷ்ட நிறம்; ஆழ்ந்த வெண்மை, அதிர்ஷ்ட எழுத்துக்கள்; V, U
கும்பம் :
பயணம் வெற்றி தரும். சுறுசுறுப்பாக செயல்படுவீர். விரக்திகள் மறையும். இனிதான செய்திகள் தேடி வரும். புதிய நட்பு உருவாகும். பேச்சில் நிதானம் தேவை. விபரீத எண்ணம் விலகும். செயல்பாட்டில் தீவிரம் கூடும். உரிய நேரத்தில் உதவிகள் கிடைக்கும். புதிய முதலீடுகளில் கவனம் தேவை. இனம் புரியா சந்தோஷம் குடி கொள்ளும். வலம்புரி வழிபாடு வளம் சேர்க்கும்.
அதிர்ஷ்ட எண்: 0, 1, 7, 2 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, அதிர்ஷ்ட எழுத்துக்கள்: Q, K
மீனம் :
புதிய நட்பு உருவாகும். மேன்மைகள் தொடரும். மெத்தனப் போக்கு மாறும். சுயதொழில் வாய்ப்பு அமையும். மங்களமான நாள். திட்டமிட்ட செயல் வெற்றி பெறும். ஆபரணப் பொருள் களவு போகும். ஆடம்பர எண்ணம் மேலோங்கும். உறவினர் வருகை உண்டு. நட்டமில்லாத நன்மை அதிகரிக்கும். பக்கத்து வீட்டு பகை மாறும். உடல் சோர்வு ஏற்படும். ஆடம்பர எண்ணம் அதிகமாகும். பசு வழிபாட்டால் பாவ விமோசனம் உண்டு.
அதிர்ஷ்ட எண்: 9, 7, 4, 0; அதிர்ஷ்ட நிறம்: வைலட், அதிர்ஷ்ட எழுத்துக்கள்: I, G.