(14-10-2021)
சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் ஒன்று வரகாபொல பிரதேசத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இன்று மதியம் வரகாபொல துல்ஹிரிய பிரதேசத்தின் மாஓயாவில் குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
உயிரிழந்த நபரின் வாய் பிலாஸ்டர் ஒன்றினால் மூடப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலத்திற்கு அருகில் இருந்து அடையாள அட்டை ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அதில் பெறப்பட்ட தகவல்களுக்கு அமைய கடந்த சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் கடந்த 10 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி பன்னல பொலிஸில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி, காணாமல் போன நபரின் மனைவியால் குறித்த சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
43 வயதுடைய அரத்தன, உடுகம பிரதேசத்தை சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.