கனடாவின் கொன்சர்வேட்டிவ் கட்சியின் தேசிய சபை உறுப்பினர் ஒருவர் கட்சியின் தற்போதைய தலைவர் எரின் ஓ டூலின் தலைமையை முன்கூட்டியே மதிப்பாய்வு செய்வதற்கான முயற்சியை முன்னெடுத்து அவருக்கு இடையூறுகள் விளைவித்தமைக்காக கட்சியின் தேசிய சபையால் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பெர்ட் சென் என்னும் பெயர் கொண்ட அவர் ஒன்ராறியோ மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் ஒரு பிரதிநிதியாக செயலாற்றினார். அவர் எதிர்வரும் 2023ம் ஆண்டுக்கு முன்னர் சபை வாக்கெடுப்பை நடத்தும் என்ற நம்பிக்கையில் தற்போதைய தலைவருக்கு எதிரான கையெழுத்து சேகரிக்க ஒரு இணையவழியிலான விண்ணப்ப படிவத்தை தொடங்கினார்.
செப்டம்பர் 20ம் திகதி அன்று நடைபெற்ற தேர்தலில் கன்சர்வேடிவ் தோல்வியடைந்த 24 மணி நேரத்திற்குள் அவர்; அந்த இணையவழி ஊடான விண்ணப்பப் படிவத்தை கட்சி உறுப்பினர்கள் மத்தியில் பரப்பினார். ஆனால் இந்த விடயம் ஓர் சட்டவிரோதமான என்றும் இது தலைவர் ஓடூலின் பதவிக்காலம் முடிவடையும் முன்னரே கொண்டுவரப்பட்ட ஒரு தவறான விடயம் என்று கட்சி தேசிய சபை சுட்டிக்காட்டியது.
அத்துடன் கட்சி செலவுகள் மற்றும் எரிபொருளுக்கான நுகர்வோர் கார்பன் விலை என்று வரும்போது தலைவர் ஓடூல் கட்சியின் கௌரவத்தை பாதிக்கச் செய்தார் என்றும் கட்சிக்கு துரோகம் இழைத்ததார் என்றும் ஏனைய கட்சி உறுப்பினர்கள் உணர்கிறார்கள் என்றும் பதவி நீக்கம் செய்யப்படுவதற்கு முன்னர் பெர்ட் சென் கூறியிருந்தார்.
தலைவர் எரின் ஓடூல் அவர்கள் நடைபெற்ற தேர்தலில் கட்சிக்கு அதிகமான வெற்றிகளை பெறுவார் என்ற நம்பிக்கையில் மிகவும் மிதமான காட்சியை காட்டுவதற்கு வைக்க முயன்றார் என்றும் ஆனால் அவ்வாறு செய்வது சில பழமைவாதிகளை எரிச்சலடையச் செய்துள்ளுத என்றும் ஏனெனில் அவர் கடந்த ஆண்டு தலைமைப் போட்டியில் கட்சித் தளத்தில் வெற்றிபெற உண்மையான நீல வேட்பாளராக தன்னைத்தானே காட்டிக் கொண்டார் என்று கூறப்பட்டது.
இது இவ்வாறிருக்க. கடந்த வாரம் தலைவர் எரின் ஓடூலின் கட்சி சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் அவரை தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கு ஆதரவாக வாக்களித்திருந்தாலும் பதவி நீக்கப்படுவதற்கு குறைந்தபட்சம் 20 சதவிகிதம் பேர் முதலில் இரகசிய வாக்கெடுப்புக்கு ஆதரவாக எழுத்துப்பூர்வ அறிவிப்பில் கையெழுத்திட வேண்டும் என்றும் நியதி உள்ளது.
எனினும் கன்சர்வேடிவ் தலைவர் எரின் ஓடுல் அவர்கள் தனது 118 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தனக்கு ஆதரவு என நம்புவதாகவும் அது வெளிப்படைத்தன்மையை உருவாக்கும் என்பதால் தனது தலைமையை மறுபரிசீலனை செய்யும் அதிகாரம் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் சபையை ஆதரிப்பதாகவும் கூறினார்.