(18-10-2021)
சேதன பயிர்செய்கைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்ப்பானவர்கள் இல்லை. ஒரு குறுகிய காலத்தில் விவசாயிகளுக்கு எதுவும் செய்யாமல் அதற்கான மாற்று ஒழுங்குகள் எதனையும் விவசாய துறையில் உள்ள அரசாங்கம் எதுவும் செய்யமால் இருக்கின்றது என வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண விவசாயிகளுக்கு சேதனப் பசளை கிடைக்கக் கூடிய வழிவகைகள் எதுவும் செய்யமால் இருக்கின்றனர். அவ்வாறான நிலையினை உடனே நிறுத்தி விவசாயிகளுக்கு கிடைக்ககூடிய வகையிலான செய்கை முறையிலான உரத்தினை தர அரசாங்கம் முன்வரவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒன்றிணைந்த ஒருங்கிணைப்பின் விவசாய சம்மேளத்தின் எற்பாட்டில் உரம் இன்றி உழவு இல்லை என்னும் கருப்பொருளில் விவசாயிகளின் தற்காலப் பிரச்சினைக்கு தீர்வு கோரி கண்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று யாழ்.நல்லூர் கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக நடைபெற்றது.
இதன்போது கலந்துகொண்ட வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
“உடனே கிருமிநாசினி, செயற்கை உரங்களை தடுத்ததால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு எற்பட்டுள்ளது. உணவு உற்பத்தி பாதிக்கப்படுகின்றது. நாட்டில் உணவுப்பஞ்சம் எற்படபோகின்றது என்ற நிலை உருவாகியுள்ளது.
ஆனாலும் சேதனப்பசளை விவசாயம் படிமுறையான விடயம் அதனை ஜனாதிபதி அவர்களின் மூன்றுவருடங்களில் அவ்வாறான விடையத்தினை செய்யலாம்.
அரசாங்கம் தவறான வழிக்கு போகின்றது. அதனை திருத்தி அமைத்து விவசாயிகளுக்கு உடனடி தேவையான செய்கை உரத்தினை தரவேண்டும். இதனை கவனம் செலுத்தி மீளாய்வு செய்யப்படவேண்டும் என நான் நம்புகின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.