பொலிஸ் அமைச்சருக்கோ அல்லது ஏனைய அமைச்சர்களுக்கோ அரச அதிகாரிகளை அச்சுறுத்த முடியாது என கூட்டு அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் மத்திய நிலையம் மற்றும் கூட்டு பயிற்சியாளர்கள் ஒன்றியத்தின் பிரதிநிதியான ஞானானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
அரச அதிகாரிகளை அச்சுறுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த காலங்களில் அரச அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்த அமைச்சர்களுக்கு என்ன நடந்தது என்பதை நாம் பார்த்துள்ளோம். இதனால் அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு பாடம் ஒன்றை கற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றார் என்றே நான் நினைக்கின்றேன்.
அரச அதிகாரிகள் அனைவரும் இணைந்து அவருக்கு பாடத்தை கற்பிக்க வேண்டும். குறைந்த சுதந்திரத்துடன் வேலை செய்ய முடியாது என்றால், அரச சேவையில் பிரச்சினை இருக்கின்றது.
சட்டத்தை மதிக்கும் சமூகத்தை உருவாக்க சரத் வீரசேகர போன்ற அமைச்சர்கள் கொண்டு வந்த திட்டங்களை அவர்களே மீறி வருகின்றனர். கண்ணாடிக்கு முன்னால் சென்று முகத்தை பார்க்குமாறே கூற முடியும் என ஞானானந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.