(மன்னார் நிருபர்)
(19-10-2021)
விடத்தல்தீவு உதைபந்தாட்ட கூடம் நேற்றைய தினம் திங்கட்கிழமை (18) மாலை மன்னார் விடத்தல்தீவில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த உதைபந்தாட்ட கூடத்தில் 22 வீரர்கள் கையெழுத்திட்டனர். மேலும் 20 வீரர்கள் குறித்த விடத்தல்தீவு உதைபந்தாட்ட கூடத்தில் இணைந்து கொள்ள ஆர்வம் காட்டியுள்ளனர்.
முதல் பயிற்சி நேற்று (18) திங்கட்கிழமை மாலை ஆரம்பிக்கப்பட்டதோடு,வீரர்களுக்கான சீருடைகளும் வழங்கி வைக்கப்பட்டது.
விடத்தல்தீவு உதைபந்தாட்ட கூடத்தின் தலைவர், வைத்தியர் மதுரநாயகம் இவ் அகடமியை ஆரம்பித்து வைத்தார்.
குறித்த நிகழ்வில் விடத்தல் தீவு புதிய அபிவிருத்தி அமைப்பின் தலைவர் அருட் சகோதரர் ஸ்ரனிஸ்லோஸ் மற்றும் சர்வ மத தலைவர்கள்,கிராம மக்கள் ,இளைஞர்கள்,வீரர்கள் என பலர் கலந்து கொண்டார்.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தில்தீவு கிராமத்தில் விடத்தல்தீவின் நண்பர்கள், விடத்தல் தீவில் வசிக்கும் 5 தொடக்கம் 15 வயதுக்குட்பட்ட இளம் கால்பந்து வீரர்களுக்காக விடத்தல்தீவு தீவு உதைபந்தாட்ட கூடம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.