21ம் திகதி பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் அதிபர்களின் சம்பளம் இடைநிறுத்தப்படும் என வடமேல்மாகாண ஆளுநர் ராஜகொலுரே அறிவித்துள்ளார்.
அவர்கள் 25ம் திகதி பாடசாலைகளிற்குள் நுழைவதற்கு அனுமதிகப்போவதில்லை எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
கல்வியமைச்சின் முடிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு பொறுப்பான அதிகாரி என்ற அடிப்படையிலும் ஆளுநர் என்ற அடிப்படையிலும் 21ம் திகதி பாடசாலைக்கு கடமைக்கு திரும்பாத ஆசிரியர்களின் சம்பளத்தை இடைநிறுத்தி வைப்பதற்கு தீர்மானித்துள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட பின்னர் 25 ம் திகதி பாடசாலைக்கு வருபவர்களையும் அனுமதிக்கப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.