யாழ்ப்பாணம் புதுச்செம்மணி வீதி, கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும்,
கனடா அஜெக்ஸ் நகரை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி கேமலதா விக்னராஜ் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி
அற்புதப் பிறவியாய் எமக்கு இறைவன் அளித்த வரம் அம்மா கேமா
நீ எம்மோடு வாழ்க்கைப் பயணத்தில் நடந்து வந்து
கூடப் பிறந்தவர்களுக்கு பிரியமான சகோதரியாய்
நாடி வந்த துணைக்கு நல்லதோர் துணைவியாய்
வந்துதித்த பிள்ளைச் செல்வங்களுக்கு அன்பான அன்னையாய்
உற்றார் உறவினர்க்கு ஏற்ற ஓரு தோழியாய்
முப்பத்தியேழு ஆண்டுகள் முழுமையாய் மிளிர்ந்தாய்
தித்திப்பாய் கடந்த உன் குடும்ப வாழ்வின் குத்துவிளக்காய் ஒளிர்ந்த நீ
திடீரென அன்று அணைந்தாய். நாம் அதிர்ந்தோம்
எம் குடும்பத்திற்கு ஒளியேற்றிய தீபம் அணைந்தது அன்றிலிருந்து நாம் அனைவருமே இடைவிடாது அழுகின்றோம்
மாளிகை போன்ற உன் இல்லம் மங்கிப் போனது
கேளிக்கையும் கொண்டாட்டமும் மறைந்தும் மறந்ததுமாய்
காலை விடிந்து மாலை வந்து பின்னர் இருள் கவ்வ எம் வாழ்க்கை அவ்வாறே கழிகிறது தினமும்..
முற்றத்தின் பூமரங்கள் கூட ஒவ்வொரு வசந்தத்திலும்
உன் வருகைக்காக காத்துக் கிடக்கின்றன
நீ கால்பதித்து நடந்த புற்தரைகள் உன் பாதங்களின் மென்மைக்காய்
இதழ் விரித்து காத்திருக்க வெள்ளைப் பனி விழுந்து முடுகின்றது
அன்பு மகளே கேமா நீ ஆசைப்பட்டதெல்லாம் அடைந்தாய்
ஆனால் நாமோ உன் மீது வைத்த பாசத்தை
நீயில்லா நாட்களிலும் நேசத்துடன் தொடர்கின்றோம்.
நீ வாழும் உலகத்தில் நிம்மதியாய் இருப்பாய் நீ
உன் இருப்பிடத்தில் என்றும் போல் அழகுடனே திகழவேண்டும்
எம்மை மறவாத அன்புடனே உன் இருப்பு தொடரவேண்டும்
பூவுலகில் நீ இன்றிப் போக எம் நிம்மதியே தொலைந்தாலும்
தாவியே வருவாய் ஓரு நாள் எம் கரங்களில் தவழ மகிழ்வோம்
உன் நினைவால் வாடும் பாசமுள்ள அப்பா, அம்மா, அன்புக் கணவர், பிள்ளைகள்,
சகோதர, சகோதரரிகள், மைத்துனர் மற்றும் மருமக்கள்
தொடர்புகளுக்கு: (647) 335-5841, (416) 754-7458