முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹம் சிறிசேன, பொலன்னறுவை தேர்தல் தொகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் சபை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தஹம் சிறிசேன அடுத்து வரும் மாகாண சபைத் தேர்தலிலும் போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹம் சிறிசேன சுதந்திரக் கட்சியில் முதலாவது முறையாக பதவியொன்றில் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அரசியலில் உத்தியோகபூர்வமாகவும் குதித்துள்ளார்.
இதற்கமைய, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை மாவட்ட இளைஞர் அணியின் தலைவராக தஹம் சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான கூட்டமொன்று நேற்றைய தினம் வியாழக்கிழமையனறு மின்னேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பதவி தொடர்பில் விணப்பித்திருந்த தஹம் சிறிசேனவின் கோரிக்கையை கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்று அப்பதவியை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.