வெஸ்ட் ஐலண்ட்(WEST ISLAND)
நகரசபைத் தேர்தல் வேட்பாளர்
திரு. ரியான் பிரவுண்ஸ்ரெயின்
MR. RYAN BROWN STEIN
DOLLARD DES ORMEAUX (D.D.O)
வட்டாரம் 7 (DISTRICT 7)
திரு ரியான் பிரவுன் ட்ரெயின் அவர்கள் WEST ISLAND வாழ் அனைத்து தமிழ் சமூகத்தினருக்கும் நன்கு அறிமுகமான வேட்பாளராவார். கடந்த தேர்தலிலும் போட்டியிட்டு 28 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்ட மக்கள் தோழராகும்.
வாழ்க்கை குறிப்புகள்
B.A பட்டதாரி, விவாகமானவர். Communication Studies and Political Science பாடங்களை முதன்மைப் படிப்பாக தேர்வு செய்து அனுபவம் பெற்றவர்.
சில காலம் (JAD 800 AM வானொலி ஒலிபரப்பு சேவையிலும் – Canada Paramount திரைப்பட நிறுவனத்திலும் பணியாற்றியவர்.
மாநில லிபரல் கட்சியின் ஆலோசகராகவும், உதவித் தலைவராகவும் – பல மாநில – மத்திய தேர்தல் காலங்களில் மாநில அமைச்சர் திரு.CARLOS LEITAOவுடனும், மாநில அவை உறுப்பினர் Pierre Marsan வுடனும் இணைந்து பல சீர்திருத்த பணிகளை ஆற்றியவர்.
WEST ISLAND பகுதி சுகாதார சீரமைப்பு – போக்குவரத்து சேவை – சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை முக்கியமானவையாகும்.” DISTRICT 7″ வாழும் அனைத்து சமூக மக்களும் ஒருங்கிணைந்து எனக்கு வாக்களிப்பதன் மூலம்- எனது வட்டார எல்லைக்குள் வாழும் தமிழ் முதியோர் தேவைகள் – குறிப்பாக மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் வளாகத்தில் நடைபெறும் வருடாந்த திருவிழா நிகழ்வுகள், ஏனைய மத சமூகத்தினரால் இடையூறு விளைவிக்காமலும், மற்றும் ஆலய நிர்வாகத்தினரின் கட்டுமான விஸ்தரிப்புகளுக்கும் நகரபிதாவுடன் கலந்தாலோசித்து ஆவண செய்வதற்கும் உங்கள் பரிபூரண ஆதரவை வழங்குங்கள்”, என கேட்டுக் கொள்கிறார்.
தகவல்: மொன்றியல் உதயன் செய்தியாளர்