CAD $ 21,042.15
கடந்த மாதம் கனடாவின் ekuruvi Steps 2021 தினமும் 10,000 காலடிகள் மூலம் நூறுநாள் நிகழ்வு , covid 19 காலத்தில் உடல், உள அரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்குடன் , இரண்டாவது வருடமாக இந்த வருடமும் சுமார் 200 பேரின் பங்குபற்றுதலுடன் நடந்து முடிந்தது .
அதே நேரத்தில் வட, கிழக்கு மற்றும் மலையகம் எங்கும் கோவிட 19 காலத்தில் பொருளாதார கடும் நெருக்கடியை எதிர்வுகொள்ளும் ஆதரவற்ற மக்களுக்கு உதவுமுகமாக திரு ஆறுதிருமுருகன் ஐயாவின் வழிநடத்தலில் ” சிவபூமி அறக்கட்டளை ” யை ஒரு குறியீட்டு அமைப்பாக நாம் இந்த வருடம் தேர்ந்தெடுத்து உதவியிருந்தோம் . அவர்களோடு சில அத்தியாவசிய தேவைகளுக்கும் வழங்கியிருந்தோம்
இந்த வகையில் ekuruvi Steps 2021 ஊடாக தாயகத்துக்கு 3,882,568.57 SL Rupees ( $ 21,042.15 CAD ) அனுப்பியுள்ளோம் என்பதை தெரிவிப்பதில் பெருமகிழ்வடைகின்றோம் .
இதில் பங்குபற்றிய அனைத்து பேரன்புமிக்க கருணைகொள் உள்ளங்களுக்கும் எங்கள் அன்பையும் , நன்றியையும் தெரிவிக்கின்றோம் . உங்கள் உடல் உள ஆரோக்கியத்துடன் இறைவன் எப்பொழுதும் இருப்பார் .
இவ்வாறு Ekuruvi Steps 2021 அமைப்பின் நிர்வாகியும் ஸ்தாபகருமான நவநீதன் ஆனந்தராஜ் தெரிவித்துள்ளார்
Contribution Summary Report
நவஜீவன் அனந்தராஜ்
Ekuruvi Steps 2021
Tel: 416 272 8543