(23-10-2021)
நீண்ட நாட்களாக வெற்றிடமாக காணப்பட்ட மன்னார்-நானாட்டான் பிரதேச சபையின் பிரதேச சபை உறுப்பினருக்கான வெற்றிடத்திற்கு புதிய உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட்டு பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
நானாட்டான் பிரதேச சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினருக்கான வெற்றிடத்துக்கு புதிய உறுப்பினராக மன்னார் முருங்கன் பகுதியை சேர்ந்த பெனடிற் யாக்கோப் பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார்.
சட்டத்தரணி ம.ரூபன்ராஜ் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
நானாட்டான் பிரதேச சபை தெரிவத்தாட்சி அலுவலர் க.விமலரூபன் கையொப்பமிட்டு அனுப்பிவைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில்
கடந்த வருடம் சுகயீனம் காரணமாக நானாட்டான் பிரதேச சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் நாகூர் மீரா ராசிக் பரிது மரணம் அடைந்த நிலையில் அவரின் வெற்றிடம் நீண்ட நாட்கள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் காணப்பட்டதை தொடர்ந்து மன்னார் முருங்கன் பகுதியை சேர்ந்த பெனடிற் யாக்கோப் பிள்ளை என்பவர் நியமிக்கப்பட்ட நிலையில் அவர் நேற்று வெள்ளிக்கிழமை (22) சட்டத்தரணி ம.ரூபன்ராஜ் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.