(மன்னார் நிருபர்)
(26-10-2021)
மன்னார்-கறிற்றாஸ் வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில் நாளை புதன்கிழமை (27) காலை 8 மணி முதல் மன்னார் வாழ்வுதயத்தில் மாபெரும் இரத்ததான முகாம் இடம் பெற உள்ளது.
‘உதிரம் கொடுப்போம் உயிரைக் காப்போம்’ எனும் கருப்பொருளில் குறித்த இரத்ததான முகாம் இடம் பெற உள்ளது.நாளை புதன்கிழமை (27) காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை இடம் பெறவுள்ளது.
குறித்த இரத்ததான முகாமில் கலந்து கொண்டு இரத்த தானம் செய்யுமாறு ஏற்பாட்டுக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.