இலங்கைக்கான டீசல்-பெற்றோல் இறக்குமதிக் குத்தகையை சிங்கப்பூர் நிறுவனத்துக்கு வழங்க அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த வருடத்தின் முதல் எட்டு மாதங்களுக்கு டீசல் மற்றும் பெற்றோலை இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கான குத்தகை சிங்கப்பூர் நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான பத்திரங்களை அமைச்சரவையில் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில சமர்ப்பித்துள்ளார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பதிவு செய்யப்பட்ட ஏலதாரர்களிடமிருந்து விலை மனுக்களை அழைப்பதன் மூலம் அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட கொள்வனவு தொடர்பான விசேட நிலைக்குழுவின் பரிந்துரையின் பேரில் இந்த நீண்ட கால ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.