மன்னார் நிருபர்
(27-10-2021)
மன்னார் சௌத் பார் மரி அன்னை நகர் பகுதியில் மன்னார் ஆயர் இல்லத்திற்கு சொந்தமான சுமார் 63 ஏக்கர் காணி மக்களின் குடியேற்றத்திற்கு பகிர்ந்தளிக்கப்பட்ட நிலையில், அப்பகுதியில் உள்ள 6 ஏக்கர் காணி மக்களின் பொது தேவைகளை கருத்தில் கொண்டு மன்னார் நகரசபைக்கு கையளிக்கப்பட்டது.
-குறித்த 6 ஏக்கர் காணியின் ஆவணங்கள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (26) மன்னார் ஆயர் இல்லத்தில் வைத்து மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்களினால் மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சனிடம் கையளிக்கப்பட்டது.
-மேலும் குறித்த பகுதியில் கத்தோலிக்க மற்றும் இந்து ஆலயங்கள் அமைக்கவும் காணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
-குறித்த நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை கிறிஸ்து நாயகம் அடிகளார் மற்றும் பள்ளிமுனை பங்கு தந்தை அருட்பணி மரியதாசன் சீமான் அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.