(மன்னார் நிருபர்)
(27-10-2021)
மன்னார் ஹற்றன் நஷனல் வங்கியினால் (H.N.B.) சிறு கைத்தொழில் நடவடிக்கைகளுக்காக கடன் பெற்றுக் கொண்ட நிலையில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட சிறு கைத்தொழில் முயற்சியாளர்கள் 3 பேருக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் நன்கொடை வழங்கப்பட்டது.
-ஏற்கனவே இரண்டு சிறு கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு தலா 1 இலட்சம் ரூபாய் வீதம் நன்கொடை வழங்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை(27) காலை 10 மணியளவில் மன்னார் வங்காலையை சேர்ந்த சிறு கைத்தொழில் முயற்சியாளர் ஒருவருக்கு மன்னார் ஹட்டன் நெஷனல் வங்கியில் வைத்து வங்கியின் நுண் நிதி பிரிவினால் ஒரு இலட்சம் ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டது.
குறித்த நன்கொடையை மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சிறிய ரங்கநாயகி கேதீஸ்வரன் வழங்கி வைத்தார்.
இதன் போது வங்கியின் முகாமையாளர் கந்தையா வடிவழகன்,நுண் நிதி அதிகாரி எம்.ஜெயராஜசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
-நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிறு கைத்தொழில் முயற்சியாளர்கள் 200 பேருக்கு ஹற்றன் நஷனல் வங்கியினால் தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் நன்கொடை வழங்கப்பட்டு வரும் நிலையில் மன்னார் மாவட்டத்தில் 3 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.