இந்திய வம்சாவழி கனடியரானஅனிற்றா ஆனந்த் கனடாவின் புதிய பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார்
இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்ட கனடாவின் புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவழி கனடியரும். ஒன்றாரியோ மாகாணத்தின் ஓக்வில் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரும் இந்தியாவின் தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவருமான அனிற்றா ஆனந்த் கனடாவின் புதிய பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார்.
கடந்த லிபரல் அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சராகப் பதவி வகித்த திரு ஹர்ஜித் சஜ்ஜான் அவர்களும் இந்தியாவின் சீக்கிய பிரஜை என்பதும் அவர் கனடிய பாதுகாப்புப் படையில் கடமையாற்றியவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
தற்போது புதிய பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்றுள்ள அனிற்றா ஆனந்த் கடந்த அரசாங்கத்தில் பொதுச் சேவைகள் மற்றும் கொள்வனவு ஆகியவற்றுக்கு பொறுப்பான அமைச்சராகப் பணியாற்றியவர் என்பதும். குறிப்பாக கனடா கொள்வனவு செய்த மில்லியன் எண்ணிக்கையிலான கோவிட்-19 தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்வதற்கு இவரே பொறுப்பாக இருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது