(மன்னார் நிருபர்)
(28-10-2021)
‘மரம் நடுவோம் எம் சந்ததியை காப்போம்’ எனும் தொனிப்பொருளில் மர நடுகை ஆரம்ப நிகழ்வு மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலையடி புதுக்குளம் ம.வி பாடசாலையில் இன்று வியாழக்கிழமை காலை 09.30மணியளவில் இடம் பெற்றது.
வனவள திணைக்களத்தின் ஏற்பாட்டில், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில் குறித்த மரம் நடுகை இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் கே.அரவிந்தராஜ்,மன்னார் மாவட்ட நீர் பாசன பணிப்பாளர் என்.ஜோகராஜா,மடு வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ்.முகுந்தன்,மன்னார் மாவட்ட வனவள திணைக்கள அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டு மர நடுகையினை மேற்கொண்டனர்.
இவர்களுக்கு பிரதேச மக்களால் கௌரவிப்பு இடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.