(28-10-2021)
கொழும்பு சிலாபம் தெதியாவ பிரதான சங்கநாயக்கரும், களனி வித்யாலங்கார மஹா பிரிவேனாவின் பிரிவேனாதிபதியும், களனி பல்கலைக்கழகத்தின் வேந்தருமான கலாநிதி வெலமிடியாவே குசலதம்ம தேரர் காலமானார்.
அவர் தனது 84 ஆவது வயதில் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படகிறது.
வெலமிடியாவே குசலதம்ம தேரர் இந்நாட்டின் சாசன முன்னேற்றத்திற்காக பெரும் சேவை செய்த துறவியென்பது குறிப்பிடத்தக்கது.
காலஞ்சென்ற தேரரின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் இன்றைய தினம் தீர்மானிக்கப்படும் என பேலியகொட வித்யாலங்கார பிரிவேனாவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.