அனைவராலும் மதிக்கப்பெறுகின்றவரும் விரும்பப்பெறுகின்றவருமான. கனடா வாழ் கவிநாயகர் விநாயகர் கந்தவனம் அவர்களது 88வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று ஆயிரக்கணக்ககானவர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருந்தனர்.
காலை தொடக்கம். தொலைபேசி வாயிலாகவும் முகநூல் வாயிலாகவும் கவிநாயகர் அவர்கள் வாழ்த்து மழையில் நனைந்த வண்ணமிருந்தார்.
பின்னர் மாலையில் கனடா கவிஞர் கழகம் ஏற்பாடு செய்த ‘மெய்நிகர் வாழ்த்தும் நிகழ்வு’ இடம்பெற்றது. அதில் கவிநாயகர் அவர்களும் துணைவியார் தவமணி அம்மையாரும் இணையராக அவர்களது இல்லத்திலிருந்து கலந்து கொண்டனர்.
இதேவேளை. கவிநாயர் கந்தவனம் அவர்களின் இல்லத்தில் ‘கேக்’ வெட்டும் ஏற்பாட்டுடன், கவிஞர் கழகத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான கவிஞர் ஞானகணேசன் அவர்கள் தனது துணைவியாரொடு அங்கு சென்றார்.
கவிஞர் ஞானகணேசன் அவர்களின் அழைப்பின் பேரில் உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் அவர்களும் தனது துணைவியாரோடு அங்கு சென்றார்.
கவிநாயர் இல்லத்தில் நேரடியாக இடம்பெற்ற ‘கேக்’ வெட்டும் நிகழ்வைத் தொடர்ந்து கவிஞர் கழகத்தின் மெய்நிகர் நிகழ்வு ஆரம்பமானது.
அதற்கு கனடா கவிஞர் கழகத்தின் தலைவர் பஞ்சநாதன் அவர்கள் தலைமை தாங்கினார். பத்துக்கு மேற்பட்ட கவிஞர் பெருமக்கள் கவிநாயகருக்கு தங்கள் இனிதாக பாக்களால் கவிமாலைகள் சூட்டி மகிழ்ந்தனர். அழைக்கப்பெற்ற அன்பர்கள் பலர் வாழ்த்துரைகளை வழங்கினர்.
இறுதியில் கவிநாயகர் தனது துணைவியார் சகிதம் நன்றி தெரிவித்தார்.
செய்தியும் படங்களும்;_ சத்தியன்