அன்பையே அடித்தளமாக அமைத்து
கருணையே வடிவமாக
ஒற்றுமையை நிலை நாட்டி
பொறுமையுடனும் புன்னகையுடனும்
உத்தம குடும்பத் தலைவனாய் வாழ்ந்து
குடும்பத்தின் மூத்த ஒளிவிளக்காய் திகழ்ந்து
எம்மை கண்ணை இமை காப்பதுபோல் காத்து
பாசமும் நேசமும் நிரம்பிய எங்கள்
அன்பு அண்ணாவே! அந்த ஒரு நிமிடம்
என் கண்ணில் வந்து போகின்றது!
கதறினோம், கலங்குகின்றோம்!
இன்னும் ஓர் நப்பாசை திரும்பி எங்களிடம்
வரமாட்டீர்களா என்று.
நீங்கள் எம்மை விட்டுப்பிரிந்து ஆண்டுகள்
பத்து ஓடி மறைந்தாலும்
இன்னும் எங்கள் இதயத்தில் இடம்பிடித்து
எமக்கு வழிகாட்டியாக இருக்கின்றீர்கள்!
உங்கள் பிரிவால் வாடும் உங்கள்
அன்புத் தம்பி குடும்பத்தின்
கண்ணீ ர் அஞ்சலி இது!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
வேண்டி நிற்கும் அம்மா அன்பு மனைவி
பிள்ளைகள். சகோதர சகோதரிகள் பெறா
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
மற்றும் உங்களை நேசிக்கும்
அத்தனை உறவுகளும்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! –
தகவல்: குடும்பத்தினர்