(02-11-2021)
தமிழ் பேசும் கட்சிகளின் ஒன்றுகூட லொன்று தற்போது யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் திண்ணையில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (Telo) ஏற்பாட்டில் குறித்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.
13ஆம் திருத்தச் சட்டத்தை முற்று முழுதாக ஆரம்ப கட்டத்தில் அமல்படுத்தப்பட்ட நிலையில் நடைமுறைப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கத்தை ஒருமித்த நிலைப்பாட்டில் கோருவதற்கான கலந்துரையாடலாக குறித்த கலந்துரையாடல் அமைந்துள்ளது.
இதில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் , தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் , தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் , தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் , ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ,தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா, தமிழ் மக்கள் கூட்டணியின் பொருளாளர் வி.பி.சிவநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குறித்த கலந்துரையாடலில் இலங்கைத் தமிழரசு கட்சி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.