(மன்னார் நிருபர்)
(4-11-2021)
தீபாவளியை முன்னிட்டு மன்னாரில் உள்ள இந்து ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இன்று வியாழக்கிழமை (4) காலை இடம்பெற்றதுடன் மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி முகக்கவசங்கள் அணிந்தவாறு பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
குறிப்பாக மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு மஹா ஸ்ரீ கருணாநந்த குருக்கள் தலைமையில் காலை 8 மணியளவில் தீபாவளி விசேட பூஜை இடம்பெற்றது.
கொரோனா தொற்றில் இருந்து விரைவில் விடுபடவும் தீபாவளி மக்களுக்கு சந்தோசத்தையும் செழிப்பையும் வழங்க வேண்டியும் விசேட பூஜை வழிபாடு இடம் பெற்றது.
மேலும் சிற்றாலயங்களிலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் மக்கள் ஒன்று கூடி வழிபாடுகளை மேற்கொண்டதுடன் விரதங்களை மேற்கொண்ட மக்களும் நேர்த்திக்கடன்கள் ஆலயங்களில் நிறை வேற்றியமையும் குறிப்பிடத்தக்கது