(5-11-2021)
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு போதை மாத்திரைகளை கடத்தி வந்த இருவரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளதுடன் , அவர்களின் இரு சொகுசு கார்களையும் கைப்பற்றியுள்ளனர்.
கொழும்பில் இருந்து பெருமளவான போதை மாத்திரைகள் யாழ்ப்பாணத்திற்கு காரில் கடத்தி வரப்படுவதாக யாழ்ப்பாண பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
தகவலின் பிரகாரம் நடவடிக்கையில் இறங்கிய புலனாய்வு பிரிவினர் கார்களை அடையாளம் கண்டு அவற்றை மடக்கி பிடித்து சோதனையிட்ட போது , அவற்றுள் இருந்து பெருமளவான போதை மாத்திரைகளை மீட்டுள்ளனர்.
இதையடுத்து இரு கார்களிலும் பயணித்த யாழ்.நகர் பகுதியை சேர்ந்த ஒருவரையும் , கொழும்பை சேர்ந்த ஒருவரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் , அவர்களின் இரு கார்களையும் யாழ்ப்பாண பொலிஸாரிடம் கையளித்துள்ளனர்.
இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.