மத்திய அமைச்சர் உட்பட எட்டு அரசியல் பிரமுகர்கள் கலந்து
சிறப்பித்தனர்
ஐந்து சேவையாளர்கள் ‘நண்பன்’ விருது வழங்கிக் கௌரவிக்கப் பெற்றனர்
சனிக்கிழமை நடைபெற்ற “உதயன்” வெள்ளி விழா மற்றும் “நண்பன்” விருது விழா ஆகியவற்றில் கனடிய மத்திய அமைச்சர் ஒருவர் உட்பட எட்டு அரசியல் பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர். அத்துடன் ஐந்து சேவையாளர்கள் ‘நண்பன்’ விருது வழங்கிக் கௌரவிக்கப் பெற்றனர்
அழைக்கப்பெற்ற சிறப்பு விருந்தினர்களாக மத்திய அமைச்சர் மேரி இங். ஓன்றாரியோ மாகாணத்தின் எதிர்க்கட்சித் தலைவி அன்றியா ஹார்வர்த். தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஹரி ஆனந்தசங்கரி. மற்றும் சல்மா சாகிட். மாகாண பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள் லோகன் கணபதி. அரிஸ் பாபிக்கியன் மற்றும் குளொவர். நகரசபை உறுப்பினர் ஜனிபர் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.
அன்றைய தினம் வழங்கப் பெற்ற தமிழ்நாட்டின் “நண்பன்” விருதுகளை ஐவர் பெற்றுக்கொண்டனர். செல்வி அபினா நிமல்ராஜ். திருவாளர்கள். சோம. சச்சிதானந்தன். ஜெயானந்தன் பூத்தப்பிள்ளை ஜெயச்சந்திரன் தியாகராஜா. விசுவலிங்கம் கணபதிப்பிள்ளை. ஆகியோரே இந்த ஐவராவர். இங்கே காணப்படும் படங்களில் அனைவரும் காணப்படுகின்றனர்.