உதயன் வெள்ளி விழா நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி புகழாரம்
“கடந்த 25 வருடங்களாக வாரந்தோறும் சிறப்பாக வெளிவரும் கனடா உதயன் பத்திரியானது. அரசியல் மற்றும் சமூகம் ஆகிய தளங்களில் நடுநிலை தவறாது வெற்றி நடைபோடுகின்றது. கனடாவில் மத்திய அரசாங்கம் சார்ந்த கட்சிகளையும் மாகாண அரசுகள் சார்ந்த கட்சிகளையும் அணைத்தும் ஆதரவு வழங்கியும் ‘உதயன்’ வார இதழ் தொடர்ச்சியாக பங்காற்றி வருவதற்கு காரணம் இந்த உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரே ஆவார். எனவே ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்களை, நாம் அனைவரும் பாராட்ட வேண்டும்”
இவ்வாறு கடந்த 30ம் திகதி சனிக்கிழமை ஸ்காபுறோ ‘ நெற்வின்’ விழா மண்டபத்தில் நடைபெற்ற உதயன் வெள்ளி விழா – மற்றும் ‘நண்பன்’ விருது விழா ஆகிய நிகழ்வுகளில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய ஸ்காபுறோ ரூஜ் பார்க் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி புகழாரம் சூட்டினார
அன்று மாலை ‘உதயன்’ வெள்ளி விழா மற்றும் ‘நண்பன்’ விருது விழா ஆகியன சிறப்பான இடம்பெற்றன.
அழைக்கப்பெற்ற சிறப்பு விருந்தினர்களாக மத்திய அமைச்சர் மேரி இங். ஓன்றாரியோ மாகாணத்தின் எதிர்க்கட்சித் தலைவி அன்றியா ஹார்வர்த். தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஹரி ஆனந்தசங்கரி. மற்றும் சல்மா சாகிட். மாகாண பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள் லோகன் கணபதி. அரிஸ் பாபிக்கியன் மற்றும் குளொவர். நகரசபை உறுப்பினர் ஜனிபர் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.
உதயன் பிரதம ஆசிரியரும் தமிழ்நாட்டின் ‘நண்பன்’ ஊடக நிறுவனத்தின் கனடா அமைப்பாளருமான ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்கள் அனைவவரையும் வரவேற்று உரையாற்றினார். தன்னோடு தொடர்ச்சியாக செயற்பட்டும் ஆதரவு வழங்கியும் ‘உதயன்’ பத்திரிகையை தங்கள் தோள்களில் சுமந்து வரும் வர்த்தகப் பிரமுகர்கள் கலை இலக்கிய நண்பர்கள் எழுத்தாளர்கள்; மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் தனது உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்தார்.
அடுத்து உரையாற்றிய அனைத்து அரசியல் தலைவர்களும் உதயன் பத்திரிகையின் நடுநிலை சார்ந்த தன்மையை பாராட்டினார்கள்.
அன்றையதினம் வழங்கப்பெற்ற தமிழ்நாட்டின் ‘நண்பன்’ விருதுகளை ஐவர் பெற்றுக்கொண்டனர். செல்வி அபினா நிமல்ராஜ். திருவாளர்கள். சோம. சச்சிதானந்தன். ஜெயானந்தன் பூத்தப்பிள்ளை .ஜெயச்சந்திரன் தியாகராஜா. விசுவலிங்கம் கணபதிப்பிள்ளை. ஆகியோர் பெற்றுக்கொண்டனர். அவர்களுக்கான விருதுகளையும் ஏனைய கௌரவங்களையும் வர்த்தகப் பிரமுகர்கள் மற்றும் அரசியல் சமூகத்தலைவர்கள் ஆகியோர் வழங்கி மகிழ்வித்தனர். அன்றைய நிகழ்வின் பிரதான ஸ்பொன்சர்கள் செய்தோர் மற்றும் அடுத்த நிலை சார்ந்த ஸ்பொன்சர் செய்தோர் ஆகிய வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள் அனைவரும் மேடைக்கு அழைக்கப்பெற்று உதயன் பிரதம ஆசிரியர் அவர்களால் கௌரவிக்கப்பெற்றார்கள்.
கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்புக் கௌரவங்கள். வாழ்த்துரைகள் ஆகியன இடம் பெற்றன.
நிகழ்ச்சிகளை வானொலி அறிவிப்பாளரும் நடிகருமான அன்ரன் பீலிக்ஸ் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
சிவஶ்ரீ பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள் ஈஸ்ட் எப் எம் 102.7 வானொலி நிலைய அதிபர் நடா ராஜ்குமார் ஆகியோர் வாழ்த்துரைகள் வழங்கினார்கள். அவர்கள் இருவரும் உதயன் பத்திரிகையின் நடுநிலை சார்ந்த ஊடகப் பணியையும் பிரதம ஆசிரியர் அவர்களின் சேவை நோக்கையையும் வியந்து பாராட்டினார்கள்.
உதயன் தொடர் எழுத்தாளர் பாஸ்டர் அல்பிரட் சொரிபிம் மற்றும் பாஸ்டர் சோதி மற்றும் பணியாளர் சங்கர் சிவானந்தன் ஆகியோர் சிறப்புக் கௌரவங்களைப் பெற்றார்கள்.
சிறப்பு நிகழ்ச்சியாக ‘ பைரவி’ நுண்கலைக் கூடத்தின் இசைக் குழுவின் மெல்லிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.