சகல பாடசாலைகளிலும் 10,11,12 மற்றும் 13 ஆம் வகுப்புக்களுக்கான கல்வி நடவடிக்கைகள், எதிர் வரும் (08) திங்கட்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், இது தொடர்பிலான சுற்றறிக்கை ஒன்றையும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
குறித்த தரங்களுக்கு பொறுப்பான அனைத்து கல்விசார் மற்றும் கல்வி சாரா ஊழியர்களையும், (08) திங்கட்கிழமை முதல் கடமைக்குச் சமூகமளிக்குமாறு அந்த சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், கர்ப்பிணிப் பணியாளர்கள் மற்றும் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளை உடையவர்கள் வேலைக்கு அழைக்கப்பட மாட்டார்கள்.
அதே நேரத்தில், நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அத்தியாவசிய சூழ்நிலைகளில் மாத்திரமே பணிக்கு அழைக்கப்படுவார்கள் என்றும், அந்த சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, பாடசாலைக்கு சமூகமளிக்கும் ஆரம்ப சில நாட்களுக்கு மாணவர்கள் பாடசாலைச் சீருடைகளை அணிந்து வர வேண்டிய அவசியமில்லை என்றும், மாணவர்களை சாதாரண தகுந்த உடையில் பாடசாலைகளுக்கு செல்ல அனுமதிக்குமாறு, பாடசாலை அதிகாரிகளுக்கு அந்த சுற்றறிக்கையில் கல்வி அமைச்சு மேலும் அறிவுறுத்தியுள்ளது.