யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தில் கல்வி பயின்று தற்போது கனடாவில் வாழ்ந்து வரும் வைத்தியர்களினால் ( JMFOA – Jaffna Medical Faculty Overseas Alumni (Canada) இலங்கைப் பெறுமதி ஒரு கோடி ரூபாய்களுக்கு மேற்பட்ட பெறுமதியான சுவாசத்துக்கு உதவும் கருவிகள் வடக்கு கிழக்கு வைத்தியசாலைகளுக்கு அண்மையில் வழங்கப்பட்டன.
JMFOA- Canada சார்பில் அதன் தலைவர் வைத்தியகலாநிதி Dr.M. மயிலாஷன் அவர்களினால் இக்கருவிகள் வைத்தியசாலை யின் பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி மற்றும் தலைமை வைத்திய அதிகாரிகள் ஆகியோரிடம் நேரடியாக கையளிக்கப்பட்டது.
அதேவேளை JMFOA- Canada அமைப்பானது COVID தொற்று இலங்கையை கடுமையாக தாக்கிய காலப்பகுதியில், வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து மாவட்ட வைத்தியசாலைகள், மாவட்ட ,மாகாண வைத்திய தலைமை அதிகாரிகளை, வெளிநாடுகளில் உள்ள மருத்துவ அமைப்புகளுடன் நேரடியாக தொடர்புகளை ஏற்றபடுத்தி ஒரு நியாயமான பரந்துபட்ட உதவிகள் கிடைக்க ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தமை, குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் JMFOA- Australia அமைப்பானது, இலங்கை பெறுமதியில் ஒரு கோடிக்கு மேற்பட்ட COVID அவசரகால வைத்திய உபகரணங்களை வடக்கு கிழக்கு வைத்தியசாலைகளுக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
JMFOA அமைப்பானது அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் இயங்குவதோடு யாழ் மருத்துவபீடம், வைத்தியசாலைகள் என பல தரப்பட்ட மருத்துவ நிறுவனகளுக்கு தமது உதவிகளை கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக வழங்கி, கல்வி மற்றும் மருத்துவ முன்னேற்றத்துக்கும் அதன் ஓருங்கமைக்கப்பட்ட வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்து வருகின்றது.
புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் பலவழிகளில் தாய்நாட்டுக்கு உதவி புரிந்துவரும் இந்தப் புலம்பெயர் வைத்தியர்களின் சேவை பாராட்டுதற்குரியது.