சேதனப் பசளை, கூட்டுப் பசளை என்பவற்றை பயன்படுத்தி விளைச்சல் குறைவாக ஏற்பட்டால் அதற்கான நஷ்ட ஈட்டினை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
சேதனப் பசளை மற்றும் கூட்டுப் பசளை மூலம் விவசாய செய்கை செய்வது தொடர்பில் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ள சந்தேக நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
விவசாயிகள் சில இடங்களில் இடம்பெறும் ஆர்பாட்டங்கள் மற்றும் ஊடகங்களில் கருத்துக்களை வைத்து அரசாங்கம் இரசாய உரத்தினை இறக்குமதி செய்யும் என்று என்னுகின்றார்கள்.
இதனை விட்டு நீங்கள் உங்களிடம் உள்ள இரண்டு அல்லது ஐந்து ஏக்கர் இருந்தால் சேதனப் பசளை, கூட்டுப் பசளை என்பவற்றை உற்பத்தி செய்வதற்காக வீட்டில் உள்ள பொருட்களை சேகரித்து மேற்கொள்ள முடியும்.
அத்தோடு உங்கள் கிராமங்களில் விவசாய திணைக்களத்தினால் நடாத்தப்படும் பயிற்சியில் கலந்து கொண்டு உங்கள் வயல்களுக்கு தேவையான உற்பத்திகளை செய்து கொள்ள முடியும்.
இதற்கான ஊக்குவிப்பு கொடுப்பனவை அரசாங்கம் வழங்கவுள்ளது. அதனை நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும்.
தாங்கள் சேதனப் பசளை, கூட்டுப் பசளை என்பவற்றின் மூலம் விவசாய செய்கை செய்யப்பட்டு விளைச்சல் குறைவாக ஏற்பட்டால் அதற்கான நஷ்ட ஈட்டினை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஒரு றை மாத்திரம் விளைச்சல் குறைவாக காணப்படும். பின்னர் விளைச்சல் அதிகரித்துக் காணப்படும்.
வயல் நில மண் இயற்கையினை மாற்றிக் கொண்டு எங்களுக்கு நஞ்சற்ற உணனை பாரிய விளைச்சலுடன் தரும் என்பதை கூறிக் கொள்கின்றேன்.
இதன் மூலம் மூதாதையர்கள் செய்ய விவசாயத்தினை மேற்கொள்ள முடியும் என்று அனைவரும் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றார்.