(6-11-2021)
சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு திட்டமிடப்பட்டே செயற்கையாக உருவாக்கப்பட்ட து என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் துஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எரிவாயு துறையில் பாரிய மாபியாவொன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அந்த மாபியாவினால் லிட்ரோ நிறுவனத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் ஜெயசிங்க குறிப்பிடுகின்றார்.
உள்ளூர் எரிவாயு விநியோகஸ்தர் ஒருவரின் கப்பலின் அச்சுறுத்தல் காரணமாக நிறுவனத்திற்கு தேவையான எரிவாயுவை கொள்வனவு செய்ய முடியாமல் போனதாகவும், இதனால் லிட்ரோ நிறுவனத்திற்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையங்களை கூட மூட வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தலைவர் குறிப்பிடுகின்றார்.
கடந்த அக்டோபர் 28ம் திகதி முதல் நவம்பர் 1ம் திகதி வரை ஒரு கேஸ் சிலிண்டரை கூட அந்த நிறுவனத்தால் சந்தைக்கு வெளியிட முடியவில்லை என அவர் கூறினார்.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய பின்னர் எரிவாயு மாபியா குறித்த உண்மைகளை மக்களுக்கு விளக்கமளிக்குமாறு ஜனாதிபதி கோரியதாகவும் அதன் பிரகாரம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்த தீர்மானித்த தாகவும் ஜயசிங்க மேலும் தெரிவித்தார்.
“கடந்த 10 ஆண்டுகளாக மாபியா வேறு எந்த நிறுவனத்தையும் எரிவாயு துறையில் நுழைய அனுமதிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்