(மன்னார் நிருபர்)
(6-11-2021)
2 இலட்சம் சமுர்த்தி பயனாளிகள் பலப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கான காசோலை வழங்கும் நிகழ்வு மன்னார் மாவட்ட செயலகத்தில் கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று சனிக்கிழமை (6) காலை இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்டான்லி டிமெல், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் , பயனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்மொழியப்பட்ட திட்டங்களுக்காக மீன்பிடி அபிவிருத்தி வேலைத் திட்டத்திற்கு 26 பயனாளிகளுக்கான காசோலைகள் அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டது.
குறிப்பாக பாசி வளர்ப்பு , மீன் வளர்ப்பு உள்ளிட்ட திட்டங்களை மேற்கொள்ளும் பயனாளிகளுக்கு காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டது.
-மன்னார் மாவட்டத்தின் 5 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 443 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை (6) முதற்கட்டமாக 26 பயணாளிகளுக்கு காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டது.
-மேலும் இயற்கை மரணமடைந்த மன்னார் மாவட்டத்தை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் இருவருக்கான காப்புறுதிக் காசோலைகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைத்தார்.
அதனடிப்படையில், இயற்கை மரணமடைந்த கடற்றொழிலாளர்களான ஏ.ஜே.எம். நிஜாம் மற்றும் கே.திருச்செல்வம் ஆகியோரின் குடும்பத்தினருக்கு தலா 250,000 ரூபாய் பெறுமதியான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.