கடந்த செவ்வாய்க் கிழமையன்று ‘உதயன்’ பத்திரிகையின் அலுவலகத்திற்கு கனடா ஓன்றாரியோ மாகாணத்தின் கல்வி அமைச்சர் Stephen Lecce அமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் சகிதம் வருகை தந்தபோது. பிரதம ஆசிரியரின் வேண்டுகோளிற்கு அமைய அவருக்கு வர்த்தகப் பிரமுகர் சங்கர் நல்லதம்பி பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
அப்போது அமைச்சர் தனக்கு முதற் தடவையாக இவ்வாறான கௌரவம் கிடைப்பதாகக் கூறி அருகில் நின்ற உதயன் பிரதம ஆசிரியர் மற்றும் லோகன் கணபதி ஆகியோரிடம் பொன்னாடையின் சிறப்புக்கள் பற்றி கேட்டறிந்து கொள்ள விரும்பினார்.
(படம்: நரேன்)