அஞ்சலி செலுத்த வந்த பிரதமர் பாதுகாப்பு அதிகாரிகளினால் தடுக்கப்பட்டார்.
போர் வீரர்கள் நினைவு நாளில் கனடிய பாராளுமன்றத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமாகக் காணப்பட்ட பொதி ஒன்று அஞ்சலி செலுத்த வந்த பிரதமர் பாதுகாப்பு அதிகாரிகளினால் தடுக்கப்பட்டார்.
இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை ஒட்டாவா மாநகரில் நடைபெற்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. கோவிட் 19 தொற்றில் பரவுகை தொடங்கியதிலிருந்து நாட்டின் தலைநகரில் நடந்த முதல் நினைவு நாள் விழா நேற்று வியாழக்கிழமை எளிமையான முறையில் நடத்தப்பட தீர்மானிக்கப்பட்டது. இதன் போது தான் காவல் நடவடிக்கைகளின் மத்தியில் ஒரு சந்தேகத்திற்கிடமான பொதி கண்டுபிடிக்கப்பட்டது, இதனால் அங்கு செல்ல் வேண்டிய அரச உயர் மட்ட பிரமுகர்களின் வருகை தாமதமானது.
ஒட்டாவா நகரத்தில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் நடைபெற்ற விழாவிற்கு அருகாமையில் பொதி காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டு பின்னர் கனடாவின் மத்திய காவல்துறையான ஆர்சிஎம்பி அதிகாரிகள் கண்டெடுக்கப்பட்ட பொதியினால் ஆபத்து எதுவும் இல்லை என்று தெரிவித்த காரணததால் அந்தப் பொதி சந்தேகத்திற்கு சில நிமிடங்களுக்குப் பிறகு அது அழிக்கப்பட்டது என்றும் கூறப்பட்டுத.
இந்த பொதி தொடர்பான சம்பவத்தினால் கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது துணைவியாரான சோபி கிரெகோயர் ட்ரூடோ ஆகியோர் திட்டமிட்டதை விட சுமார் 10 நிமிடங்கள் தாமதமாக விழாவிற்கு செல்ல பாதுகாப்பு அதிகாரிகளினால் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் கனடாவின் புதிய ஆளுனர் நாயகமான மேரி சைமன் அவர்கள் தனது பதவிக்கு நியமனம் செய்யப்பட்டதிலிருந்து தனது முதல் நினைவு நாளைக் குறிக்கும் வகையில்,கலந்து கொள்ள வந்தபோது. அவரும் 10 நிமிடங்களுக்கு மேல் தாமதித்தே செல்வதற்கு கேட்டுக்கொள்ளப்பட்டார்
முன்னாள் போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் இந்த நாளில் கனடிய இராணுவத்தில் பணியாற்றிய மற்றும் தொடர்ந்து பணியாற்றுபவர்களை கௌரவிப்பதற்காக அனுசரிக்கப்படும் மௌன அஞ்சலிக்கு பின்னர் ஆளுனர் நாயகம் சைமன் மணிகள் ஒலித்த பிறகு அந்த இடத்திற்கு வந்தார் என்றும் அறியப்படுகின்றது.
இதே வேளை இந்த பொதி தொடர்பான விடயத்தை அறிந்து கொள்ளாதவர்கள். சம்பவத்தின் தன்மையை புரிந்து கொள்ளாமலே பிரதமர் ட்ரூடோ மற்றும் ஆளுனர் நாயகம் மேரி சைமன் இருவரும் தாமதமாக வருகை தந்ததை கண்டித்து சமூக ஊடகங்களில் விமர்சனத்தை வெளியிட்ட விடயம் பிரதமர் அலுவலகத்திற்கும் மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தியதாகவும் அறிவிக்கப்பட்டது.
நேற்று வியாழக்கிழமை காலை சம்பவம் கவலைக்குரியது இல்லை என்ற விடயம் பாதுகாப்பு அதிகாரிகளினால் கண்டறியப்பட்டாலும், இந்த ஞாபகார்த்த வைபவம் இடம் பெற்ற நடந்த இடமானது 2014 இல், தலைநகரில் கடமையில் இருந்த நேதன் சிரில்லோ என்னும் இராணுவ வீரர் தேசிய போர் நினைவிடத்தில் காவலர் பணியில் இருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார், அன்று பாராளுமன்ற வளாகமும் தாக்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது