தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டுப் பல்வேறு இடங்களிலும் மரநடுகையை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருகட்டமாக நேற்று முன்தினம் (14.11.2021) ஞாயிற்றுக்கிழமை பளையில் மரநடுகை இடம்பெற்றுள்ளது.
முகமாலை தெற்கு தூய ஆரோக்கியமாதா ஆலய வளாகத்தில் நிழல் மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டதோடு, பொதுமக்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
இம்மரநடுகையில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன், பொருளாளர் க. கேதீஸ்வரநாதன், சூழல் பாதுகாப்பு அணியின் துணைச் செயலாளர் த. யுகேஸ், ஆலயத்தின் அருட்பணிச் சபையின் அங்கத்தவர்கள் ஆகியோருடன் பொது மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டுப் பொதுமக்களுக்கும், பொது அமைப்புகளுக்கும் இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.