(1-11-2021)
கிளிநொச்சி, பரந்தன் சிவபுரம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலமானது புதன்கிழமை 17ம் திகதி காலை பரந்தன் சிவபுரம் பகுதியில் பாழடைந்த தற்காலிக கொட்டகையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
சம்பவ இடத்திற்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் சென்றனர்.
இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் வினவிய போது,
குறித்த ஆணின் சடலமானது இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் அப்பகுதி பொலிஸார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.