இலங்கையில் போர் முடிந்து 12 ஆண்டுகள் ஆன பிறகும் காணாமல் போனவர்களுக்கு என்னவாயிற்று என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. உறவுகளை கையளித்தவர்கள் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அரசால் நியமிக்கப்பட்ட காணாமல் போனோரை கண்டுபிடிப்பதற்கான அலுவலகம் இதுவரை ஒருவரைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் இலங்கை நாடாளுமன்ற வரவுசெலவு திட்ட அறிக்கையில், காணாமல் போனவர்களின் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்க 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச அறிவித்தார். ஆனால் இதை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நிராகரித்துள்ளனர். இது குறித்த உதயனின் சிறப்பு கானொளி.