கனடா வன்னிச் சங்கத்தின் (V united care for kids Inc)ன் வருடாந்தப் பொதுச்சபைக் கூட்டம் 30-10-2021 அன்று மிகச் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட அறக்கட்டளை அமைப்பு என்பதனால் கடந்த பல மாதங்களாக இயக்குனர்சபைக் கூட்டங்களில், எவ்வாறு சிறப்பாக பொதுக்கூட்டத்தை நடத்தி முடிப்பது என்பது விரிவாக ஆராயப்பட்டு அதற்கமைவாக இக்கூட்டமானது நடைபெற்றது.
கோவிட் – 19 தொடர்பான அரசாங்க நடைமுறை ஒழுவிதிகளினால் கடந்த இரு ஆண்டுகளாக பொதுச்சபைக் கூட்டத்தினை நடாத்தமுடியாத சூழ்நிலை காணப்பட்டது. இன்றைய காலகட்டத்தில் அத்தகைய ஒழுங்கு நடைமுறைகள் சிறிது சிறிதாக தளர்த்தபட்டு மக்கள் சில கட்டுப்பாடுகளுடன் ஒன்று கூடக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டதனால் இப்பொதுக்கூட்டமானது சட்டத்தரணி அவர்களின் ஆலோசனையின் பிரகாரம் கனடா ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தில் கூட்டப்பட்டது. இக்கூட்டத்திற்கான அறிவித்தல்கள் முறையாக அங்கத்துவம் பெற்றிருந்த பொதுச்சபை உறுப்பினர்களுக்கு அவர்களது மின்னஞ்சல்களுக்கு அனுப்பட்டதுடன் பொது அறிவித்தலாக கனடா உதயன் பத்திரிக்கை வாயிலாகவும் உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டது. மண்டபவாயிலில் கோவிட் – 19 தொடர்பான அனைத்து விவரங்களும் தெளிவாக ஒட்டப்பட்டிருந்தன.
உள்ளே வரும் பொது சபை உறுப்பினர்கள் அனைவரும் vaccin பாஸ்போர்ட் ,பெயர்கள், அடையாள அட்டைகள், அனைத்தும் இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தினர் முன்னிலையில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பொதுச் சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் ஏற்கனவே மின்னஞ்சல் மூலமும் covid -19 சம்பந்தமான ஒழுங்கு நடைமுறை விதிகள் அனுப்பி வைக்கப்பட்டது. பொதுச் சபை உறுப்பினர்கள் அனைவரும் அவ் ஒழுங்குவிதிகளைப் பின்பற்றி அதற்கேற்ப முகக் கவசம் அணிந்து, சமூகஇடைவெளியையும் பேணி கூட்டத்தில் அமர்ந்திருந்தனர்.
பொதுவான கூட்ட நடைமுறைகள் நடைபெற்று முடிந்ததன் பின்னர் ஏற்கனவே பொதுச்சபை உறுப்பினர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட புதிய யாப்புத் தொடர்பாக எழுத்துமூலம் சமர்ப்பிக்கப்பட்ட திருத்தங்கள் சபையில் ஆராயப்பட்டு சபையின் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது. இறுதியில் புதிய யாப்பினை சபையின் அனுமதிக்கு விடப்பட்டபோது அது மூன்றில் இரண்டுக்கும் அதிகப்படியான வாக்குளால் சபையில் நிறைவேறியது.
அடுத்து புதிய இயக்குனர்சபை உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டு ஏற்கனவே கோரப்பட்டிருந்த இயக்குனர்சபை உறுப்பினர்களாவதற்கான விண்ணப்பங்கங்களின் அடிப்படயில் மறைமுக வாக்கெடுப்பின் மூலம் 21 இயக்குனர்சபை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.
இத்தேர்தல்களை நடாத்துவதற்குப் பொறுப்பாகப் பொதுச்சபையினால் திரு தங்கராசா சிவபாலு தலைமைத் தேர்தல் அதிகாரியாகவும் திரு கா. யோகநாதன் அவர்களும், திரு க. அம்பலவாணர் அவாகளும் உதவியாளர்களாகவும் நியமிக்கப்பட்டனா். இம் மூன்று செயற்பாட்டாளர்களதும் நேர்த்தியான கடமையினைச் சபை வெகுவாகப் பாராட்டுகின்றது. இத்துடன் 1:45 மணி ஆரம்பிக்கப்பட்ட கூட்டமானது மாலை 7 மணியளவில் இனிது நிறைவேறியது.
பொ. சிவசுதன்,
செயலாளர், வன்னிச் சங்கம்-கனடா.