அன்பிற்கு இலக்கணமாய் அவனியில் வாழ்ந்து
பண்புடமை காத்து பக்குவமாய் வழி நடந்தீர்
இரக்கத்தின் இருப்பிடமாய் ஈகை பல செய்து எல்லோருக்கும்
நல்லவராய் நாணயமாய் நடந்தீர்
ஏனோ இறைவன் இடைநடுவில் பறித்து விட்டான்….
துன்புற்றோர் துயர் துடைத்து துணைக் கரமாய்
அடைக்கலம் தந்த உம்மை ஆண்டவன் ஏனழைத்தான?
பண்புள்ளோரை பல காலம் வாழவிடக் கூடாதென்றோ…..
என் செய்வோம் இறைவன் சித்தம் இது இனி காணமுடியாத
சோகநிலையோடு இங்கிருந்தே ஏங்குகின்றோம்
கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாகப் போனாலும்
எங்கள் முன்னே உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும்
மண் விட்டு மறைந்து நீர் விண்நோக்கிச் சென்றாலும்
கண் விட்டு மறையாமல் எம் நினைவோடு இருப்பீர்..
என்றும் உன் நீங்காத நினைவுகளுடன் உனது குடும்பம்
(905) 554-2433