கனடாவிற்கான விஜயம் ஒன்றை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும், நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஆகியோர் மேற்கொண்டு சென்றனர் . அங்கு ஸ்காபுறோ என்னும் இடத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற . சுமந்திரன்மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஆகியோர் கலந்துகொண்ட நிலையில் அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த கூட்டத்தில் இருந்து மிகவும் வேகமாக எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சாணக்கியன் வெளியேறி சென்றனர்.
மேலும் இந்த கூட்டத்தில் இருந்து வெளியேறிய போது அங்கு சென்று குழப்பம் விளைவித்தவர்கள் சுமந்திரனின் முகத்திற்குநேரே விரல்களை நீட்டி “நீ இனி கனடாவிற்கு வரக் கூடாது’என எச்சரிக்கை விடுத்தனர். அத்துடன் அவர்கள் ” மாவை சேனாதிராஜா. ஶ்ரீதரன் சிவஞானம் ஆகியோர்க்கு எதிராகவும் கூச்சலிட்டதாகவும் கூறப்படுகின்றது