(22-11-2021)
முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படும் என தகவல் கிடைத்தும் அதைத் தடுத்து நிறுத்த சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு எதிரான வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆரம்பமானது.
குறித்த சம்பவம் தொடர்பாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக 855 குற்றச் சாட்டு கள் அடங்கிய குற்றப்பத்திரம், கொழும்பு மூவரடங்கிய நிரந்தர நீதாய நீதி மன்றில் வாசிக்கப்பட்டது.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ வுக்கு எதிராகவும் 855 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் பட்டுள்ளதுடன், வழக்கு விசாரணை இன்று பிற்பகல் 1.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளமை தெரியவந்துள்ளது.